ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

‘தர்பார்’ வில்லன்... தாறுமாறான அப்டேட்!

‘தர்பார்’ வில்லன்... தாறுமாறான அப்டேட்!

நடிகர் பிரதிக்

நடிகர் பிரதிக்

  • News18
  • 1 minute read
  • Last Updated :

    தர்பார் படத்தின் வில்லன் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

    பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படம் தர்பார். 2.0 படத்தை அடுத்து மீண்டும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது.

    11 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாகிறார் நயன்தாரா. பேட்ட படத்தில் ஹிட் பாடல்களைக் கொடுத்த அனிருத் தர்பார் படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். பேட்ட படத்தில் ரஜினிக்கு ஆடைவடிவமைப்பாளராக பணியாற்றிய நிஹாரிகா பசின்கான் இந்தப் படத்திலும் இடம்பெற்றுள்ளார்.

    கடந்த 9-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டனர். முழுக்க முழுக்க காவல்துறை பின்னணியில் நடைபெறும் கதைக்களம் என்பதை இப்படத்தின் போஸ்டர் வெளிப்படுத்துகிறது.

    இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிகர் ப்ரதீக் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளையில் நடிகர் பிரதீக் வில்லனுக்கு மகனாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் பிரதீக் நடித்த பாகி 2 படத்தைப் பார்த்த ஏ.ஆர்.முருகதாஸ், அவருக்கு இந்தப் படத்தில் வாய்ப்பளித்துள்ளார் என்றும் சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

    முன்னதாக கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தின் இந்தி வெர்ஷனில் பிரதீக் நாயகனாக நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

    வீடியோ பார்க்க: இரண்டு படத்திலும் அரசியல் கருத்துக்களை முன்வைக்கும் சூர்யா!

    ஐஸ்வர்யா ராஜேஷின் புதிய புகைப்படங்கள்!


    சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  பொழுதுபோக்கு செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.


    Published by:Sheik Hanifah
    First published:

    Tags: A.R.murugadoss, Darbar, Rajini Kanth