அஜித்தின் 'வலிமை’ வாய்ப்பை மிஸ் செய்த நடிகருக்கு தனுஷ் படத்தில் சான்ஸ்!

பட்டாஸ் படத்தில் நடிகர் தனுஷ்

 • Share this:
  தனுஷின் 43-வது படத்தில் நடிகர் பிரசன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

  வலிமை திரைப்படத்தில் நடிகர் அஜித்துக்கு வில்லனாக பிரசன்னா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதற்காக அவரிடம் பேச்சுவார்த்தையும் நடந்தது.

  அதுகுறித்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்த பிரசன்னா, “வலிமை படத்தில் அஜித்துடன் நான் நடிக்க வேண்டும் என்று பலரும் விரும்பி எனக்கு வாழ்த்து சொன்னீர்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடந்ததும் உண்மைதான். என்னுடைய திரைவாழ்க்கையில் மிகப்பெரிய அறிவிப்பாக இச்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் துரதிருஷ்ட வசமாக அந்த வாய்ப்பு எனக்கு இந்தமுறை கிடைக்கவில்லை.

  பிரசன்னா | அஜித்


  விரைவில் தல அஜித்துடன் இணைந்து நடிப்பேன் என்று நம்புகிறேன். அஜித்துடன் நடிக்க முடியாதது எனக்கு மிகுந்த கவலையளித்தாலும் உங்களுடைய அன்பால் இதிலிருந்து மீண்டு விட்டேன்.” என்று கூறியிருந்தார்.

  இந்நிலையில் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 43-வது படத்தில் நடிகர் பிரசன்னா இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

  மேலும் படிக்க: விஜய் மட்டுமே தமிழகத்தில் ஷூட்டிங் நடத்துகிறார்... பாஜகவின் போராட்டம் முறையற்றது - ஆர்.கே.செல்வமணி

  ட்விட்டரை கலக்கும் அதுல்யா ரவியின் பக்திப் பரவச புகைப்படங்கள்!

  Published by:Sheik Hanifah
  First published: