நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பலத்த காயம்.. கவலையில் ரசிகர்கள்!

பிரகாஷ் ராஜ்

அறுவை சிகிச்சை செய்வதற்காக நடிகர் பிரகாஷ் ராஜ் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.

  • Share this:
தென்னிந்தியாவின் பிரபல நடிகராக விளங்கும் பிரகாஷ் ராஜ் வீட்டில் தடுமாறி விழுந்ததில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக அறுவை சிகிச்சை செய்வதற்காக அவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு புறப்பட்டு சென்றார்.

வில்லன், குணச்சித்திர கதாப்பாத்திரம் என பல்வேறு பரிமாணங்களில் நடித்து தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளவர் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழிப் படங்களிலும் நடித்து வருகிறார்.

Also Read: ‘11 நிமிடம் தான் பாலியல் வன்புணர்வு செய்தார்’: குற்றவாளிக்கு தண்டனையை குறைத்து ஷாக் கொடுத்த பெண் நீதிபதி!

‘கேஜிஎஃப் 2’, அண்ணாத்த, பொன்னியின் செல்வன், அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’, திருச்சிற்றம்பலம், மாறன் உள்ளிட்ட பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் சமீபத்தில் மணிரத்னம் தயார்ப்பில் வெளியான ஆந்தாலஜி படமான நவரசாவில் எதிரி என்ற படத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

இந்நிலையில் நேற்று நடிகர் பிரகாஷ் ராஜ் வீட்டில் இருந்த போது எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்துள்ளார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்த போது அவருக்கு தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டிருப்பதாக தெரியவந்தது. இதனையடுத்து அறுவை சிகிச்சைக்காக ஹைதராபாத்துகு பிரகாஷ் ராஜ் புறப்பட்டு சென்றுள்ளார்.

Also Read: குளிக்கும் போது வீடியோ எடுத்து மிரட்டி பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த 81 வயது ரிடையர்ட் பேராசிரியர்!இது தொடர்பாக அவருடைய ட்விட்டர் பக்கத்தில் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள பதிவில், “சின்னதா விழுந்துட்டேன், சின்னதா எலும்பு முறிவு ஏற்பட்டுருக்கு, சிறிய அறுவை சிகிச்சைக்காக ஹைதராபாத்துக்கு செல்கிறேன், எனது நண்பரான மருத்துவர் குருவாரெட்டியிடம் பாதுகாப்பான கரங்களில் சிகிச்சை பெற்று திரும்பி வருவேன். நான் நன்றாக இருப்பேன் கவலைப்படாதீங்க. உங்களின் நினைவுகளின் என்னை வைத்திருங்கள்” என மிகவும் உணர்ச்சிகரமாக பதிவிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடிகர் பிரகாஷ் ராஜுக்கு காயம் ஏற்பட்டிருப்பதும், அறுவை சிகிச்சை நடக்க இருப்பதும் தமிழ், கன்னடம், இந்தி என அவருடைய ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

 
Published by:Arun
First published: