கேஜிஎஃப் இயக்குநர் - பிரபாஸ் இணையும் ‘சலார்’... ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

கேஜிஎஃப் இயக்குநர் - பிரபாஸ் இணையும் ‘சலார்’... ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்

சலார் ஃபர்ஸ்ட் லுக்

கேஜிஎஃப் பட இயக்குநர் - பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் படத்துக்கு ‘சலார்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

  • Share this:
பாகுபலி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகர் பிரபாஸ், தற்போது ராதே ஷ்யாம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தை அடுத்து நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப்பச்சன், தீபிகா படுகோன் உடன் இணைந்து நடிக்கிறார். இது பிரபாஸின் 21-வது படமாக உருவாக உள்ளது.

இதையடுத்து தன்ஹாஜி பட இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் ஆதிபுருஷ் என்ற 3டி படத்தில் பாலிவுட் நடிகர் ஷயீப் அலிகான் உடன் இணைந்து நடிக்கிறார். 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளது. 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி ஆதிபுருஷ் திரைக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கேஜிஎஃப் பட இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ‘சலார்’ என்று டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தை கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தற்போது 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' பணிகளில் இருக்கும் பிரஷான்த் நீல், அதை முடித்துவிட்டு பிரபாஸ் நடிக்கவுள்ள படத்தின் பணிகளைக் கவனிக்கவுள்ளார்.

இதுவரை பார்க்காத பிரபாஸை ‘சலார்’ படத்தில் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்றும், நிச்சயம் ரசிகர்கள் அதை ரசிப்பார்கள் என்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் கூறியுள்ளார். அதேபோல் ‘சலார்’ படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக பிரபாஸ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: மறைந்த நடிகை சில்க் ஸ்மிதாவின் செம ஹிட்டான பாடல்கள் - வீடியோ

'கே.ஜி.எஃப் சேப்டர் 1', 'கே.ஜி.எஃப் சேப்டர் 2' ஆகிய படங்களைத் தொடர்ந்து பிரபாஸ் - பிரஷாந்த் நீல் படத்தையும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியிட ஹொம்பாளே ஃபிலிம்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது.


உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Sheik Hanifah
First published: