• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ரஜினிகாந்த் முதல்வரானால் நான்...? கோரிக்கை வைத்த பவர் ஸ்டார்

ரஜினிகாந்த் முதல்வரானால் நான்...? கோரிக்கை வைத்த பவர் ஸ்டார்

பவர் ஸ்டார் | சூப்பர் ஸ்டார்

பவர் ஸ்டார் | சூப்பர் ஸ்டார்

  • Share this:
    நடிகர் ரஜினிகாந்துக்கு பவர் ஸ்டார் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

    சமீபத்தில் சென்னையில் நடந்த சிவகாமி படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடிகர், ராதாரவி, பவர் ஸ்டார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    அப்போது பேசிய பவர் ஸ்டார், “நான் இந்த இடத்தில் நிற்க அண்ணன் ராதாரவி தான் காரணம். சினிமாத்துறையில் நடிக்க முடிவெடுத்த பின்னர் ராதாரவியிடம் ஆலோசனை கேட்டேன். அப்போது என்னை திட்டினார்.

    ஏன் இப்படி திட்டுகிறீர்கள். நான் ஹீரோவாக நடிக்கிறேன் என்றேன். நீ காமெடியனாக நடிக்க வேண்டும் என்று சொன்னார். அப்போது அவர் பொறாமையில் தான் சொல்கிறார் என்று நினைத்தேன்.

    சரி இவர் ஒருபக்கம் இப்படி சொல்லிக் கொண்டே இருக்கட்டும் என்று நினைத்து நான் ஹீரோவாக ஒருபடத்தில் நடித்தேன். அந்தப் படம் தான்  ‘லத்திகா’. அந்தப் படம் 400 நாட்கள் ஓடியது. மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

    அடுத்து வில்லனாக நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்து  ‘ஆனந்த தொல்லை’ படத்தில் நடித்தேன். அதையும் முடித்துவிட்டு ராதாரவியிடம் சென்றேன். ஏன் இப்படி எல்லாம் செய்கிறாய், வீணாப்போகிறாய் என்று திட்டினார். அதையும் நான் கண்டுகொள்ளவில்லை. ஒவ்வொரு படம் தொடங்கும் போதும் ராதாரவியிடம் சென்று திட்டு வாங்கி தான் நடித்தேன்.

    எவ்வளவு சோதனை வந்தாலும் சாதனையாக்குவது தான் எனது எண்ணமாக இருக்கும். அதற்காக கிட்டத்தட்ட ரூ.40 கோடி செலவிட்டேன். என்ன பேசப்போகிறேன் என்று தெரியவில்லை இருந்தாலும் நான் பேசுகிறேன்.

    ரஜினிகாந்த்க்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சீக்கிரமே கட்சி ஆரம்பியுங்கள். என்னை உங்களது கட்சியில் சேர்த்தால் துணை முதல்வராக நியமிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நான் கட்சி ஆரம்பிக்கிறேன். நீங்கள் வாருங்கள்” என்று கூறினார். பவர் ஸ்டாரின் இந்தப் பேச்சைக் கேட்டு அரங்கமே கரவொலியால் அதிர்ந்தது.

    மேலும் படிக்க: நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக குற்றச்சாட்டு...! வரலட்சுமியின் கருத்தை ஆமோதித்த ராதிகா சரத்குமார்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: