நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி

நடிகர் 'பவர் ஸ்டார்' சீனிவாசன் மருத்துவமனையில் திடீர் அனுமதி

பவர் ஸ்டார் சீனிவாசன்

நடிகர் பவர் ஸ்டார் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 • Share this:
  தமிழ் சினிமாவில் அனைவராலும் செல்லமாக பவர் ஸ்டார் என்று அழைக்கபடுபவர் சீனிவாசன்.இவர் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த லத்திகா திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.பின்பு கண்ணா லட்டு தின்ன ஆசையா திரைப்படத்தில் சந்தானத்துடன் இணைந்து நடித்தார்.

  பவர் ஸ்டார் நடிப்பை அனைவரும் கலாய்த்தாலும் அவற்றை கண்டுக்கொள்ளாமல் சினிமாவில் பெயர் சொல்லும் இடத்தை பிடித்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்.மேலும் 2019 ஆம் ஆண்டு எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான கேப்மாரி திரைப்படத்தில் பவர் பாண்டி துரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டை பெற்றார்.

  இந்நிலையில் உயர் ரத்த அழுத்தம் காரணமாக நடிகர் பவர் ஸ்டார் மதுரவாயலில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக முதுகு வலி ஏற்பட்டுள்ளது.எனவே மூன்று வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.இந்த செய்தி பவர் ஸ்டார் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: