மருத்துவத்துக்காக ரூ. 2 லட்சம் நிதியுதவி அளித்த சிரஞ்சீவி - நன்றி கூறிய நடிகர் பொன்னம்பலம்!

சிரஞ்சீவி மற்றும் பொன்னம்பலம்

நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அவருக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் உதவி செய்து வருகின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தன்னுடைய சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக 2 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்த தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவிக்கு நடிகர் பொன்னம்பலம் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் வில்லனாக நடித்த நடிகர் பொன்னம்பலம் கடந்த சில வருடங்களாக சிறுநீரக பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வருகிறார். நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள அவருக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் உதவி செய்து வருகின்றனர். வெள்ளித்திரையில் கோலோச்சிய அவர், பிக் பாஸ் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றார். அவருடைய மருத்துச் செலவுக்கும் உதவி செய்த நடிகர் கமல்ஹாசன், பொன்னம்பலத்தின் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.


இந்த நிலையில் சிறுநீரக பாதிப்பு அதிகமானதையடுத்து பொன்னம்பலத்துக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகச்சை செய்ய வேண்டியிருந்தது. இதற்காக, தான் நடித்த கலைஞர்களிடம் உதவி கேட்ட அவருக்கு, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி 2 லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுத்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய சிகிச்சைக்கு நிதியுதவி அளித்த சிரஞ்சீவிக்கு நடிகர் பொன்னம்பலம் நன்றி தெரிவித்து டிவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில், அவர் கொடுத்த 2 லட்சம் ரூபாய் பணம் சிகிச்சைக்கு பேருதவியாக இருந்ததாக கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், "சிரஞ்சீவி அண்ணனுக்கு வணக்கம். ஜெய் ஸ்ரீராம். ரொம்ப நன்றி அண்ணே. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு எனக்கு நீங்கள் அளித்த ரூ.2 லட்சம், மிகவும் உதவியாக இருந்தது. இந்த உதவியை உயிருள்ளவரை மறக்க மாட்டேன். அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி. உங்கள் பெயரைக் கொண்ட ஆஞ்சநேயர் என்றும் உங்களை சிரஞ்சீவியாக வைத்திருப்பார். நன்றி அண்ணே" என்று பொன்னம்பலம் பேசியுள்ளார்.

Also read... 'உதவ முடியாமல் தவிக்கிறேன்' - நடிகர் சோனுசூட் வேதனை!

கடந்த ஒரு வருடத்துக்கும் மேலா, கொரோனா நெருக்கடி அறக்கட்டளை என்கிற அமைப்பை ஆரம்பித்து, கொரோனா பிரச்சினையால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டிருக்கும் திரைக்கலைஞர்கள் பலருக்கும் நடிகர் சிரஞ்சீவி தொடர்ந்து உதவி வருகிறார். இதேபோல், தமிழ் திரைபடத்துறையைச் சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கும் நலிவடைந்த சினிமா கலைஞர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

குறிப்பாக, இயக்குநர் மணிரத்னம் 10 கோடி ரூபாய் பெப்ஸி அமைப்புக்கு நிதியுதவி அளித்துள்ளார். இதேபோல் தல அஜீத் குமார் சுமார் 10 லட்சம் ரூபாய் பெப்ஸி அமைப்புக்கு கொடுத்துள்ளார். நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஒரு லட்சம் ரூபாய் கொடுத்துள்ளார். பாதிக்கப்பட்டுள்ள கலைஞர்களுக்கு உதவுமாறு தயாரிப்பாளர் பூச்சி முருகன் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்த கலைஞர்களுக்கு கோவை சரளா, தாடி பாலாஜி ஆகியோர் அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகளை இலவசமாக வழங்கினர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: