• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • பிக்பாஸ் 3: யாரு பைனல்ஸ் போவாங்க? யாரு எலிமினேட் ஆவாங்க? பொன்னம்பலம் ஓபன் டாக்!

பிக்பாஸ் 3: யாரு பைனல்ஸ் போவாங்க? யாரு எலிமினேட் ஆவாங்க? பொன்னம்பலம் ஓபன் டாக்!

பொன்னம்பலம்

பொன்னம்பலம்

இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன், லாஸ்லியா, சரவணன், வனிதா, கவின், சாண்டி ஆகியோர் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று பொன்னம்மபலம் கூறியுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் எந்தப் போட்டியாளர்கள் பைனல்ஸ் வரை செல்வார்கள் என்று நடிகர் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

    கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் வாரத்தை நிறைவு செய்து இரண்டாம் வாரத்தில் சென்று கொண்டிருக்கின்றது. வீட்டின் முதல் கேப்டனாக வனிதா விஜயகுமார் பொறுப்பேற்றிருந்த நிலையில் இந்த வாரம் மோகன் வைத்யா வீட்டின் தலைவராகியுள்ளார்.

    வீட்டின் தலைவர்களை மற்றவர்கள் எவிக்‌ஷன் செய்ய முடியாது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் இந்த வாரம் எவிக்‌ஷனின் இருந்து தப்பித்துள்ளனர் வனித்தாவும் மோகனும்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் சாக்சிக்கு மலர்ந்த காதல்!

    இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 2-ல் போட்டியாளராக பங்கேற்ற நடிகர் பொன்னம்பலம் இந்த சீசனில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்றும் யார் முதல் வாரமே எலிமினேட் ஆகப் போகிறார்கள் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடரபாக தனியார் நிறுவனத்திற்கு பொன்னம்பலம் அளித்த பேட்டியில் கடைசியாக பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றவர் தான் முதலில் வெளியேறுவார் என்று கூறியுள்ளார். அவர் சொன்னதை வைத்து பார்க்கும் போது மிதுன் தான் பிக்பாஸ் வீட்டிற்குள் கடைசியாக சென்றவர். எனவே, மீரா மிதுனை தான் பொன்னம்பலம் கூறியுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.

    பாபி சிம்ஹாவின் அக்காவா பிக்பாஸ் ரேஷ்மா? வைரலாகும் போட்டோ!

    மேலும், இந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் சேரன், லாஸ்லியா, சரவணன், வனிதா, கவின், சாண்டி ஆகியோர் தான் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்று பொன்னம்மபலம் கூறியுள்ளார்.

    அதிலும் லாஸ்லியாவிற்கு உலக அளவில் ரசிகர்கள் இருக்கிறார் என்றும் அவருக்கு இலங்கைத் தமிழர்கள் அனைவரும் வாக்களிப்பார்கள் என்றும் பொன்னம்மபலம் கூறியுள்ளார்.

    Also see...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: