Home /News /entertainment /

"2020?... குடியுரிமை சட்டம் ரத்தா...? ரத்தமா...?" நடிகர் பார்த்திபனின் குழப்பமான ட்வீட்

"2020?... குடியுரிமை சட்டம் ரத்தா...? ரத்தமா...?" நடிகர் பார்த்திபனின் குழப்பமான ட்வீட்

நடிகர் - பார்த்திபன்

நடிகர் - பார்த்திபன்

  • News18
  • 1 minute read
  • Last Updated :
    நடிகர் பார்த்திபன் 2020-ம் ஆண்டு என்ன நடக்கும் குடியுரிமை சட்டம் ரத்தா? ரத்தமா என்று குழப்பமான ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

    இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர் என பல அவதாரங்களை எடுத்து ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்தவர் பார்த்திபன்.

    புதிய பாதை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆர்.பார்த்திபன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ”கோடிட்ட இடங்களை நிரப்புக”. 2017-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சாந்தனு, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

    இந்தப் படத்தை அடுத்து பார்த்திபன் தற்போது இயக்கி நடித்துள்ள படம் ஒத்த செருப்பு. எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திக்கும் பார்த்திபனின் ‘ஒத்த செருப்பும்’ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

    Also see... இணையத்தில் வைரலாகும் பிக்பாஸ் ரைசாவின் நியூ போட்டோஸ்!

    இந்நிலையில், 2020-ம் ஆண்டு என்ன பன்னுவது என்ன நடக்கும் என்பது குறித்து பார்த்திபன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில், 2020? இரண்டாயிரத்து இருபது ஆதரவற்ற குழந்தைகளோடு ஆரவாரமாய் கொண்டாடலாமா? என்ன சினிமா செய்யலாம்? ஆஸ்கர் விருது எந்தப் படத்துக்கு? குடியுரிமை சட்டம் ரத்தா?ரத்தமா? என்று பதிவிட்டுள்ளார்.



    சமீபத்தில் இந்தியா முழுவதும் தொடர்ந்து குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தற்போது போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பார்த்திபனின் ட்வீட் ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published:

    Tags: Actor Parthiban

    அடுத்த செய்தி