ரூ.1.25 லட்சம் ஐபோனுக்கு ஆர்டர் செய்து பிளாஸ்டிக் போனை பெற்ற பிரபல நடிகர்!

திருமணமாகி 3-வது ஆண்டு விழா நெருங்குவதையொட்டி நகுல் தனது மனைவிக்கு பரிசளிக்க விரும்பினார்.

news18
Updated: December 3, 2018, 11:00 PM IST
ரூ.1.25 லட்சம் ஐபோனுக்கு ஆர்டர் செய்து பிளாஸ்டிக் போனை பெற்ற பிரபல நடிகர்!
நடிகர் நகுல்
news18
Updated: December 3, 2018, 11:00 PM IST
நடிகர் நகுல் ஆன்லைன் விற்பனையில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான ஐபோனுக்கு ஆர்டர் செய்த நிலையில், அவருக்கு மலிவு விலையிலான போலி போன் டெலிவரி செய்யப்பட்டதால் அவர் அதிர்ச்சியடைந்தார்.

கடந்த 2003-ல் வெளியான ‘பாய்ஸ்’ படத்தில் நடிகர் நகுல் அறிமுகமானார். பின்னர் ‘காதலில் விழுந்தேன்’,  ‘மாசிலாமணி’ உள்ளிட்ட படங்களில் நகுல் கதாநாயகனாக நடித்தார். 2016-ல் ஸ்ருதி என்பவரை நகுல் திருமணம் செய்தார்.

தற்போது, ‘எரியும் கண்ணாடி’ என்னும் படத்தில் நகுல் நடித்து வருகிறார். இந்நிலையில், திருமணமாகி 3-வது ஆண்டு விழா நெருங்குவதையொட்டி நகுல் தனது மனைவிக்கு பரிசளிக்க விரும்பினார்.

இதன்படி, பிளிப்கார்ட் இணையதளத்தில் ரூ.1.25 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்தார் நகுல். அவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் வீட்டில் ஐபோன் டெலிவர் செய்யப்பட்டுள்ளது.

2 நாள் கழித்து வீடு திரும்பிய நகுல், பார்சலை பிரித்து பார்த்தபோது, அது மலிவு விலையிலான போன் என்பது தெரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நகுல் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு புகார் தெரிவித்தார். எனினும், இப்பிரச்னையை தீர்க்காமல் அவர்கள் அலைகழித்துள்ளனர். இதுகுறித்து, நகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

First published: December 3, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...