முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / "தயவு செய்து விதிகளை பின்பற்றுங்கள்" - கொரோனாவின் இரண்டாம் அலை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர்...!

"தயவு செய்து விதிகளை பின்பற்றுங்கள்" - கொரோனாவின் இரண்டாம் அலை பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய நடிகர்...!

நகுல்

நகுல்

அதிகாரிகள் மற்றும் முன்னணி தொழிலாளர்களின் முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தனது சமீபத்திய சமூக ஊடக பதிவில் நகுல் வலியுறுத்தியுள்ளார்.

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதன் காரணமாக, தமிழ்நாட்டில் புதிய கட்டுப்பாடுகள் போடப்பட்டதை அடுத்து நடிகர் நகுல் ஜெய்தேவ் மக்களிடம் ஒரு சிறப்பு கோரிக்கையை வைத்துள்ளார். மேலும், கொரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறவும், அனைத்து விதிகளையும் நாம் கடைபிடிக்க வேண்டும். அதுமட்டுமல்லாது அதிகாரிகள் மற்றும் முன்னணி தொழிலாளர்களின் முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என தனது சமீபத்திய சமூக ஊடக பதிவில் நகுல் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான ஒரு வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அவர், “தாழ்மையான கோரிக்கை. #Covid-ஐ வெல்லலாம், தயவுசெய்து இந்த கொடிய வைரஸ் பரவுவதை நிறுத்த ஒருவருக்கொருவர் உதவுங்கள். மேலும் விஷயங்களை மிகச்சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று உங்களைப் பின்தொடர்பவர்கள், குடும்பத்தினர், நண்பர்களுக்கு தினமும் நினைவூட்டுங்கள். இதை வெல்ல முன்களப்பணியாளர்களுடன் போராட்டத்தில் இணையுங்கள்! விதிகளைப் பின்பற்றுங்கள், இதை நாம் வெல்ல முடியும் (sic) ” என்று கேப்ஷன் செய்துள்ளார்.

மேலும் அந்த வீடியோவில் பேசிய அவர், சமீபத்தில் அரசு மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருக்கும் வீடியோவை நீங்கள் அனைவரும் பார்த்திருப்பீர்கள். மேலும் அந்த வீடியோவை பார்த்து பிறகு நிலைமை எவ்வளவு மோசமானதாக மாறிவிட்டது என்பதை எண்ணி வேதனையாகவும், பயமாகவும் இருந்தது. மக்கள் அனைவரும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது அவசியம். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேறாதீர்கள். மேலும், விதிமுறைகளை ஒழுங்காக பின்பற்றி கொரோனாவை வெல்ல வேண்டும்.

பெரும்பாலான மக்கள் கொரோனாவுக்கு மடிந்து வருகின்றனர். அது மிகவும் வேதனையளிக்கிறது. ஒன்றாக நாம் போராட வேண்டியது அவசியம்" என்று குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை பாதிப்பு பலமடங்கு அதிகரித்து வந்ததையடுத்து, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை விதித்து வந்தது. முதலில், மே 1-ம் முதல் மாநிலம் முழுவதும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதேபோல, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அனுமதிக்கப்பட்ட சில கட்டுப்பாடுகளுடன் அமல்படுத்தப்பட்டது.

Also read... "என்னை அசிங்கப்படுத்தினார்கள்"... மனம் திறந்த 'பிக்பாஸ்' சாக்ஷி!

இதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்தும் நோக்கில் மே6ம் தேதியில் இருந்து 20ம் தேதி வரை அனைத்து கடைகளும் பகல் 12 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என்று கடந்த வாரம் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த முழுஊரடங்கே தீர்வாக இருக்கும் என்று பேசப்பட்டு வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமையன்று முழுஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, மே10ம் தேதி காலை 4 மணி முதல் மே 24ம் தேதி காலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. நேற்றுவரை தமிழகத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,80,259ஆக அதிகரித்து உள்ளது. மேலும், வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 12,20,064 ஆக உயர்ந்தது. வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15,648ஆக அதிகரித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Actor Nakul