முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகை மீனாவின் கணவர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது - சரத்குமார்

நடிகை மீனாவின் கணவர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது - சரத்குமார்

நடிகை மீனா கணவருடன்

நடிகை மீனா கணவருடன்

Meena Husband Death: நடிகை மீனா அவர்களின் கணவர் வித்யாசாகர் மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது - சரத்குமார்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. இவருக்கும் பெங்களூருவை சேர்ந்த மென் பொறியாளர் வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். மீனா கணவருடன் பெங்களூருவில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மீனா மற்றும் அவரது கணவர் வித்யாசாகர் கொரொனாவில் பாதிப்படைந்தனர். கொரோனாவிலிருந்து மீண்டாலும் அதன் பக்கவிளைவுகள் வித்யாசாகரின் நுரையீரலில் ஏற்பட்டு அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நுரையீரல் பாதிப்பு மற்றும் நெஞ்சுவலிக்காரணமாக எம்.ஜி.எம் மருத்துவமனையில் சில தினங்களாகசிகிச்சை பெற்றுவந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் நேற்று காலமனார். மீனா கணவரின் மறைவுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய திரைப்பட நடிகையும், எனது நெருங்கிய குடும்ப நண்பருமான நடிகை மீனா அவர்களின் கணவர் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்த தகவலறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைகிறேன்.

Also Read:  நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்

வித்யாசாகர் மறைவால் ஆற்றொணா வேதனையில் ஆழ்ந்திருக்கும் மீனா அவர்களும், நைனிகாவும், நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இத்துயரில் இருந்து விரைவில் மீள்வதற்கு இறைவன் அருள் புரியட்டும். அவரது குடும்பத்தார்க்கும், நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் என் குடும்பத்தின் சார்பாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Actress meena, Corona, Sarathkumar