முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / நடிகரின் மனைவிகளிடையே சண்டை: 3வது மனைவி படுகாயம்!

நடிகரின் மனைவிகளிடையே சண்டை: 3வது மனைவி படுகாயம்!

நடிகர் மன்சூர் அலிகானின் காயமடைந்த 3-வது மனைவி

நடிகர் மன்சூர் அலிகானின் காயமடைந்த 3-வது மனைவி

  • Last Updated :

நடிகர் மன்சூர் அலிகானின் 2-வது மற்றும் 3 -வது மனைவிகள் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 3-வது மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான வில்லன்களில் நடிகர் மன்சூர் அலிகான் மிக முக்கியமானவர். இவர் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமானது கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் தான். சமீபத்தில் வெளியான குலேபகாவலி, செக்கச்சிவந்த வானம் போன்றவற்றிலும் தனது சிறப்பான நடிப்பை அவர் வெளிப்படுத்திருந்தார்.

சமீபகாலமாக ஸ்டெர்லைட் ஆலை குறித்தும், சேலம்-சென்னை இடையிலான பசுமைவழிச் சாலை குறித்து சர்ச்சைக்குறிய கருத்துகளை தெரிவித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் பினையில் வெளியே வந்தார். இருந்தும் தொடர்ந்து அரசின் மக்களை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிராக அவர் குரல் கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகானின் 2-வது மனைவிக்கும் 3 மனைவிக்கும் ஏற்பட்ட தகராறில், காயம் அடைந்த மூன்றாவது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னையில் அவர்கள் ஒரே வீட்டில் வசித்து வரும் நிலையில் 2-வது மனைவி ஹமிதா, குழந்தைகளுடன் திரைப்படம் பார்க்க சென்றுள்ளார். இதை விரும்பாத 3-வது மனைவி வாகிதா, வீடு திரும்பிய ஹமிதாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தள்ளு, முள்ளு ஏற்பட்டதில், வாகிதா படியிலிருந்து கீழே தள்ளி விடப்பட்டதாக கூறப்படுகிறது.  இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

First published:

Tags: Actor Mansoor ali khan, Attacked, Mansoor ali khan, Mansoor ali khan 3rd wife