குடும்பத்துடன் மரணம் என சமூக வலைத்தளங்களில் புரளி பரப்பி வசூல்: நடிகர் மங்கள நாத குருக்கள் போலீசில் புகார்!

நடிகர் மங்கள நாத குருக்கள்

திரைப்படங்களில் குருக்களாக நடித்து பிரபலமாகியவர் மங்கள நாத குருக்கள்

 • Share this:
  சமூக வலைதளங்களில் திரைப்பட நடிகர் மங்கள நாத குருக்கள் இறந்துவிட்டதாகவும், தகனம் செய்வதற்கு பணமில்லை எனக்கூறி பணத்தை வசூல் செய்து வரும் விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

  திரைப்படங்களில் குருக்களாக நடித்து பிரபலமாகிய மங்கள நாத குருக்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் இறந்துவிட்டதாகவும், அவர்களது உடலை தகனம் செய்வதற்கு பணமில்லாமல் தவித்து வருவதாகவும், தங்களால் முடிந்த பண உதவிகளை அளிக்கும் படி சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இதனை நம்பிய பலர் பணம் அனுப்பி வந்துள்ளனர்.

  Also Read:   முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான பாலியல் வழக்கு: ராமநாதபுரம் விரைந்த தனிப்படை போலீசார்!

  இந்த நிலையில் தான் உயிரோடு இருப்பதாகவும், பொய்யான தகவலை பரப்பி வரக்கூடிய இதுபோன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். பின்னர் அளித்த அவர் பேட்டியில், திரைப்படத் துறையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருவதாகவும், சமூக வலைதளங்களில் சில விஷமிகள் பரப்பிய பொய்யான தகவலால் தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  இந்த பதிவை கண்ட பலர் தங்களால் முடிந்த பணத்தை அனுப்பி வருகின்றனர். இதனால் சமூக வலைதளங்களில் இருந்து உடனடியாக அந்த பதிவை நீக்கக்கோரியும், பணத்தை வசூல் செய்து வரும் அந்த விஷமிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.
  Published by:Arun
  First published: