தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ்பாபு தனது தந்தையின் கோரிக்கையை தனது கொள்கையை காரணம் காட்டி மறுத்துள்ளது தெரிய வந்துள்ளது.
பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிருஷ்ணாவின் மகன் மகேஷ்பாபு . ஆந்திராவின் பிரின்ஸ் என்று கொண்டாடப்படுகிறவர் . பிற நடிகர்களைப் போல் பொதுவெளியில் கலகலப்பாக பழகுகிறவர் இல்லை . ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்துள்ளார் .
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இவர் நடித்த ஒக்கடு ( கில்லி ), போக்கிரி ( போக்கிரி ) படங்களின் ரீமேக்கில் விஜய் நடித்துள்ளார் . அதேபோல் விஜய் நடித்த படங்களில் நடிப்பீர்களா என்று கேட்டதற்கு , ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என பல வருடங்களுக்கு முன்பே கூறியிருந்தார் . அவருக்கு விஜய் படங்களில் அதிகம் பிடித்தது துப்பாக்கி . எனினும் அப்படத்தின் ரீமேக்கில் நடிக்கவில்லை . பதிலாக , அதேபோல் ஒரு படத்தை இயக்கித்தர வேண்டும் என்று முருகதாஸுக்கு அவர் கொடுத்த வாய்ப்புதான் ஸ்பைடர் . தெலுங்கு தவிர பிற மொழிகளில் நடிப்பதில்லை என்பதும் மகேஷ்பாபு வின் கொள்ளை .
Also read... Suriya: நடிகர் சூர்யாவுக்கு நன்றி சொன்ன மோகன் பாபு...!
இந்நிலையில் , கிருஷ்ணா தனது மகனிடம் என் . டி . ராமராவும் , ரங்காராவும் இணைந்து நடித்த பாதாள பைரவி படத்தை இந்த காலகட்டத்துக்கு ஏற்ப ரீமேக் செய்து , அதில் நடிக்கும்படி மகேஷ்பாபுவை கேட்டுள்ளார் . ஆனால் , ரீமேக் படங்களில் நடிப்பதில்லை என்ற தனது கொள்கை காரணமாக அக்கோரிக்கையை மகேஷ்பாபு மறுத்துள்ளார் .
பாதாள பைரவி 1951 மார்ச் 15 தெலுங்கில் வெளியானது . அதே வருடம் மே 17 தமிழில் வெளியிட்டனர் . இரண்டு மொழிகளிலும் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது . தெலுங்கு மொழியில் முதல்முதலாக 200 நாள்களை கடந்த படம் அதுவே .
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by: Vinothini Aandisamy
First published: June 07, 2021, 20:11 IST
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.