Mahat Raghavendra: மகனுக்கு தமிழில் பெயர் வைத்த நடிகர் மகத் ராகவேந்திரா...!

குழந்தையுடன் நடிகர் மகத் மற்றும் பிராய்ச்சி மிஸ்ரா

மகன் பிறந்த மகிழ்ச்சியில் இருக்கும் இந்தத் தம்பதியினர் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகர் மகத், பிரபல மாடல் பிராய்ச்சி மிஸ்ரா தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. சமூகவலைதளத்தில் இது குறித்து கிட்டத்தட்ட லைவ் ஷோ போன்றே ஒவ்வொரு கட்டத்தையும் பகிர்ந்து வந்தார் மகத்.

மனைவி பிராய்ச்சி மிஸ்ரா கர்ப்பமானது, அவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புகைப்படம், அவருக்கு வளைக்காப்பு நிகழ்ச்சி நடத்தியது என அனைத்தையும் மகத் பகிர்ந்தார். அதே போல் குழந்தை பிறந்ததையும் உடனே சமூகவலைதளத்தில் அறிவித்தார். மகன் பிறந்த மகிழ்ச்சியில் இருக்கும் இந்தத் தம்பதியினர் குழந்தையின் புகைப்படத்தையும் வெளியிட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், மகனுக்கு அதியமான் ராகவேந்திரா என்று பெயர் வைத்திருப்பதாக ட்விட்டரில் தனது குடும்பப் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் மகத். 2006 இல் வல்லவன் படத்தில் அறிமுகமான மகத் மங்காத்தா, ஜில்லா போன்ற வெற்றிப் படங்களில் நடித்தார்.

Also read... Leena Manimekalai: லீனா மணிமேகலையின் இயக்கத்தில் ‘மாடத்தி’ பேசும் சாதி அரசியல்!

2013 இல் பேக் பென்ச் ஸ்டூடன்ட் தெலுங்குப் படத்தில் நாயகனாக நடித்தார். பிக் பாஸ் சீஸன் 2 அவரை தமிழகமெங்கும் பிரபலப்படுத்தியதுதனி நாயகனாக மகத் நடித்த படம் அவருக்கு வெற்றியைத் தரவில்லை என்பது குறிப்பிடதக்கது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: