காதலியைக் கரம்பிடிக்கும் காமெடி நடிகர் அஷ்வின்... 24-ம் தேதி டும் டும் கெட்டிமேளம்
நகைச்சுவை நடிகர் அஷ்வின் ராஜா தான் காதலித்த பெண்ணை கரம்பிடிக்க இருக்கிறார்.

நடிகர் அஷ்வின்
- News18 Tamil
- Last Updated: June 20, 2020, 2:35 PM IST
லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுவாமிநாதனின் மகன் அஸ்வின் ராஜா. பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் மொட்டை ராஜேந்திரனுக்கு மகனாக நடித்திருந்த அஸ்வின், வந்தான் வென்றான், கும்கி, தில்லு முல்லு உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.
கும்கியில் தம்பி ராமையாவுடன் நகைச்சுவைக் கூட்டணி அமைத்து அசத்தியிருந்த அஷ்வின் அந்தப் படத்துக்கு பின்னர் கும்கி அஷ்வின் என பெயர் மாற்றம் செய்து கொண்டார். இந்நிலையில் இவருக்கும் சென்னை கே.கே.நகரை சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்யாஸ்ரீக்கும் காதல் மலர்ந்து தற்போது திருமணத்தில் முடிவடைந்திருக்கிறது.
வித்யா ஸ்ரீ அமெரிக்காவில் எம்.எஸ் படித்து முடித்துள்ளார். இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள அஷ்வின் வீட்டில் வரும் 24-ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது. மேலும் படிக்க: எனக்கென யாரும் இல்லை... திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தது ஏன்? - கண்ணீருடன் வனிதா விஜய்குமார் விளக்கம்
கொரோனா லாக்டவுனில் திருமணம் நடக்க இருப்பதால், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
கும்கியில் தம்பி ராமையாவுடன் நகைச்சுவைக் கூட்டணி அமைத்து அசத்தியிருந்த அஷ்வின் அந்தப் படத்துக்கு பின்னர் கும்கி அஷ்வின் என பெயர் மாற்றம் செய்து கொண்டார். இந்நிலையில் இவருக்கும் சென்னை கே.கே.நகரை சேர்ந்த ராஜசேகரின் மகள் வித்யாஸ்ரீக்கும் காதல் மலர்ந்து தற்போது திருமணத்தில் முடிவடைந்திருக்கிறது.
வித்யா ஸ்ரீ அமெரிக்காவில் எம்.எஸ் படித்து முடித்துள்ளார். இருவீட்டாரும் காதலுக்கு சம்மதம் தெரிவித்ததை அடுத்து சென்னை சூளைமேட்டில் உள்ள அஷ்வின் வீட்டில் வரும் 24-ம் தேதி திருமணம் நடக்க இருக்கிறது.
கொரோனா லாக்டவுனில் திருமணம் நடக்க இருப்பதால், நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.