மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்க தேவரின் பெயரை வைக்க வேண்டும் எனவும் கள்ளர், மறவர் ஆகியோரை தேவர் இனம் என அறிவித்த அரசாணையை நடைமுறையில் கொண்டு வர வேண்டும் என சுமார் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முக்குலத்தோர் புலிப்படை சார்பாக பாதயாத்திரை மேற்கொள்ள இருப்பதாக கருணாஸ் தெரிவித்தார்.
இந்த பாத யாத்திரையை வருகிற ஜனவரி 24 ஆம் தேதி சென்னை நந்தனம் முத்துராமலிங்க தேவர் சிலையில் தொடங்கி ராமநாதபுரம் பசும்பொன் நினைவிடம் வரை நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும், இந்த யாத்திரையை மேற்கொள்ள அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியிருப்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும் அரசு கடினமாக உழைத்து கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது, இதன் மூலம் கொரோனா மீண்டும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். மேலும், நடிகர் சிம்பு கொரோனாவை வெல்வோம் கொல்வோம் 100 சதவீதம் இருக்கைகள் குறித்து பேசியது பற்றி கருத்து சொன்னவர், அது கண்டிக்கத்தக்கது எனவும் கொரோனா தொற்று நோய் நடிகர் சிம்புக்கு வந்திருந்தால் தெரியும் என கருணாஸ் தெரிவித்தார்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.