• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • ‘சிறப்பான ஒரு அப்டேட் இருக்கு’... ‘வலிமை’ பற்றி நடிகர் கார்த்திகேயா ட்வீட்

‘சிறப்பான ஒரு அப்டேட் இருக்கு’... ‘வலிமை’ பற்றி நடிகர் கார்த்திகேயா ட்வீட்

கார்த்திகேயா | அஜித்

கார்த்திகேயா | அஜித்

‘வலிமை’ படம் குறித்து நடிகர் கார்த்திகேயா கொடுத்திருக்கும் தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • Share this:
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60-வது படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடித்து வருவதாகவும் கார், பைக் ரேஸ் காட்சிகள் அதிகம் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஹைதராபாத் சென்னை, உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டில் படமாக்கத் திட்டமிட்ட காட்சிகளின் படப்பிடிப்பை இந்தியாவிலேயே நடத்தி முடிக்கவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

‘வலிமை’ படம் ஆரம்பிக்கப்பட்ட போது படக்குழுவினர் கொடுத்த தகவலைத் தவிர இதுவரை எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாததால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று பிறந்தநாள் கொண்டாடிய நடிகர் கார்த்திகேயாவுக்காக ஸ்பெஷல் பர்த்டே டிபியை உருவாக்கி அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர் அஜித் ரசிகர்கள்.



அதற்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்த நடிகர் கார்த்திகேயா, “என் மீது அதிகம் அன்பு காட்டிய அஜித் ரசிகர்களுக்கு நன்றி. கடினமாக உழைத்து அனைவரையும் பெருமைப்படுத்துவேன் என்று உறுதியளிக்கிறேன். கொஞ்சம் பொறுமையாக இருங்க. நீங்க எதிர்பார்த்ததை விட சிறப்பான ஒரு அப்டேட் வரப்போகுது” என்று #வலிமை ஹேஷ்டேக் உடன் ட்வீட் செய்துள்ளார்.



‘வலிமை’ படத்தில் கார்த்திகேயா வில்லனாக நடித்து வருவதாக கூறப்படும் நிலையில் அவரது ட்வீட் அஜித் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sheik Hanifah
First published: