'ரெமோ’ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருக்கும் படம் ‘சுல்தான்’. இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் ராஷ்மிகா மந்தனா. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய, விவேக் - மெர்வின் இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளனர்.
வெளியீட்டுக்கு தயாராக இருந்த இத்திரைப்படம் முதலில் ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது திரையரங்க வெளியீட்டுக்கு மாறியுள்ளதாகவும், திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோருடன் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் டீசரை வெளியிட்டிருக்கும் படக்குழு ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்குகளில் படம் ரிலீசாகும் எனவும் தெரிவித்துள்ளது. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த டீசரில் மகாபாரதத்தை ஒருமுறை போர் இல்லாமல் படித்துப் பாருங்க சார் என்கிறார் கார்த்தி.
இன்று மாலை 5 மணிக்கு டீசர் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில் அரை மணி நேரம் தாமதமாகி 5.30 மணிக்கு வெளியிடப்பட்டது. இதனால் ரசிகர்கள் அதிருப்தி அடைந்தாலும் டீசரைப் பார்த்து மகிழ்ந்திருப்பார்கள் என நம்பலாம்.