அரசு பேருந்தில் பயணம்... காலேஜ் லைஃப் அனுபவம் பகிர்ந்த கார்த்தி

நடிகர் கார்த்தி

கல்லூரி கால புகைப்படத்தை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகர் கார்த்தி.

  • Share this:
நடிகர் சிவகுமாரின் மகனும் சூர்யாவின் தம்பியுமான நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். சென்னையில் பிறந்து வளர்ந்த இவர் பிஎஸ்பிபி பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து கிரசென்ட் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் முடித்தார்.

அப்போது சென்னை அரசுப்பேருந்தில் தனது நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கும் நடிகர் கார்த்தி, “சென்னை மக்களின் நம்பத்தக்க நண்பன் பல்லவன். என் கல்லூரி நாட்களில் அதிகம் பல்லவன் பேருந்தில் செலவழித்திருக்கிறேன்” என்று கூறியுள்ளார். கார்த்தியின் இந்த பதிவு லைக்ஸ்களைக் குவித்து வருகிறது. 
View this post on Instagram

 

A post shared by Karthi Sivakumar (@karthi_offl)


சென்னையில் கல்லூரி படிப்பை முடித்து வெளிநாட்டில் மேற்படிப்பு படித்த நடிகர் கார்த்தி, இயக்குநர் மணிரத்னத்திடன் ஆயுத எழுத்து திரைப்படத்தில் உதவியாளராக பணியாற்றி பின்னர் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் கார்த்தி தற்போது மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வனில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான ‘கைதி’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று ஹிட் அடித்திருக்கும் நிலையில் ரெமோ பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோர் நடித்திருக்கும் ‘சுல்தான்’ ஏப்ரல் 2-ம் தேதி திரையரங்கில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sheik Hanifah
First published: