Actor Karthi : சென்னையில் படமாகும் கார்த்தியின் சர்தார் சண்டைக்காட்சி..

சர்தார்

சென்னை பூந்தமல்லி பகுதியில் கார்த்தியின் சர்தார் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

  • Share this:
    நடிகர் கார்த்தி 2007 ஆம் ஆண்டு பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படத்திலேயே அசைக்க முடியாத இடத்தை பெற்றார். பின்பு தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல இப்படி பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.சமீபத்தில் கார்த்தி நடிப்பில் ‘சுல்தான்’ திரைப்படம் வெளியானது. இந்நிலையில் தனது அடுத்த படமான சர்தார் திரைப்படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.

    இந்நிலையில் சென்னை பூந்தமல்லி பகுதியில் கார்த்தியின் சர்தார் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. கார்த்தி இடம்பெறும் சண்டைக் காட்சியை இயக்குனர் தற்போது எடுத்து வருகிறார்.

    ALSO READ : ஜப்பானில் வெளியானது ரஜினியின் தர்பார் - ரசிகர்கள் கொண்டாட்டம்

    கார்த்தி இரு வேடங்களில் நடிக்கும் படம் சர்தார். இரும்புத்திரை, ஹீரோ படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் சர்தாரை இயக்குகிறார். பிரின்ஸ் பிக்சர்ஸ் படத்தை தயாரிக்கிறது. கொரோனா ஊரடங்கால் மற்ற படங்களைப் போலவே சர்தாரின் படப்பிடிப்பும் தடைப்பட்டது. தற்போது ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், படப்பிடிப்பை மீண்டும் தொடங்கியுள்ளனர். சென்னை கோகுலம் சினிமாஸில் கார்த்தி இடம்பெறும் சண்டைக் காட்சி தற்போது எடுக்கப்படுகிறது. இந்தச் சண்டைக் காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பாராயன் அமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்

    PHOTOS : பிங்க் நிற உடைகளில் அசத்தும் பாலிவுட் குயின் கத்ரீனா கைஃப் - போட்டோஸ்

    சர்தாரில் ராஷி கண்ணா, ரஜிஷா விஜயன் என இரு நாயகிகள். ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். கார்த்தியின் கடைசிப் படம் சுல்தான் இந்த வருட ஆரம்பத்தில் வெளியானது. அவரது அடுத்த வெளியீடாக சர்தார் இருக்கும். இந்தப் படம் தவிர, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வனிலும் அவர் நடித்து வருகிறார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Tamilmalar Natarajan
    First published: