ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கார்த்தியின் 'ஜப்பான்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ..!

கார்த்தியின் 'ஜப்பான்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ..!

ஜப்பான்

ஜப்பான்

கார்த்தி நடிக்கும் ஜப்பான் படம் பிடிப்பு தொடங்கியது. மேலும் முதல் பார்வையை நாளை மறுதினம் வெளியிடுகின்றனர். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

கார்த்தி நடிக்கும் ஜப்பான் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது. அத்துடன் படத்தின் முதல் பார்வையை நாளை மறுதினம் வெளியிட உள்ளனர்.

விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய வெற்றி படங்களைத் தொடர்ந்து ஜப்பான் என்ற திரைப்படத்தில் கார்த்தி நடிக்கிறார். அந்த படத்தை ராஜு முருகன் இயக்குகிறார்.  இதற்கான பூஜை  சென்னை ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது.

இதன்பின் 12-ம் படப்பிடிப்பை தொடங்க படக் குழுவினர் திட்டமிட்டனர். அதன்படி இன்று ராமநாதபுரத்தில் ஜப்பான் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.  முதலில் கார்த்தி இல்லாத காட்சிகளை படமாக்குகின்றனர்.

15ஆம் தேதி முதல் நடிகர் கார்த்தி ஜப்பான் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.  ராமநாதபுரத்தில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. அதன் பின் கொடைக்கானலில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை தொடங்க உள்ளனர்.

எம்ஜிஆருடன் கோட் அணிந்து ஆண் வேடத்தில் இருக்கும் நடிகை யார் தெரிகிறதா?

ஜப்பான் திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்க, ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். அதேபோல் அனு இமானுவேல் நாயகியாக நடிக்கிறார்.

Published by:Srilekha A
First published:

Tags: Actor Karthi, Kollywood, Tamil Cinema