ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தில் திடீர் லைவ்.. ஷாக்கான நடிகர்.. ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டரில் விளக்கம்!

கார்த்தியின் பேஸ்புக் பக்கத்தில் திடீர் லைவ்.. ஷாக்கான நடிகர்.. ஹேக் செய்யப்பட்டதாக ட்விட்டரில் விளக்கம்!

கார்த்தி பேஸ்புக்

கார்த்தி பேஸ்புக்

Actor Karthi Facebook Hacked | நடிகர் கார்த்தியின் ஆஃபிஸியல் பேஸ்புக் பக்கத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் ஹேக் செய்துவிட்டதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கார்த்தி. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி இரட்டை வேடத்தில் நடித்து தீபாவளி அன்று வெளிவந்த 'சர்தார்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தப்படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் உருவாக்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், நடிகர் கார்த்தியின் ஆஃபிஸியல் பேஸ்புக் பக்கத்தை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் ஹேக் செய்துவிட்டதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். மேலும் தனது பேஸ்புக் பக்கத்தை மீட்டெடுக்க பேஸ்புக் குழுவுடன் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கார்த்தி தெரிவித்துள்ளார். கார்த்தியின் இந்த பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் பலரும் தங்களுக்கு பிடித்த நடிகர்களின் வாழ்க்கையில் அன்றாடம் நடப்பதை தெரிந்துகொள்வதில் ஆர்வமாக இருக்கிறார்கள். எனவே நடிகர்கள் அனைவரும் தங்களது புகைப்படங்கள் மற்றும் தாங்கள் நடிக்கும் படங்கள் சார்ந்த விவரங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் கார்த்தி ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்து சமூக இணைதள பக்கத்திலும் தனக்கான பிரத்தியோக பக்கத்தை வைத்துள்ளார். இந்த பக்கங்களில் தன்னைப்பற்றிய அனைத்து தகவல்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தான் தற்போது தான் நடித்து வரும் 'ஜப்பான்' படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் கார்த்தி. ராஜு முருகன் இயக்கத்தில் இவர் நடிக்கும் இந்தபடத்தில் இவருக்கு ஜோடியாக அணு இம்மானுவேல் நடிக்கிறார்.

Also Read : தென்னிந்திய நடிகர்களின் சிறுவயது போட்டோஸ் - யார் யாருன்னு தெரியுதா?

இந்த நிலையில்தான் இன்று அதிகாலையிலிருந்து கார்த்தியின் ஆஃபிஸியல் ஃபேஸ்புக் பக்கத்தில் கேம் சம்பந்தமான வீடியோ ஒன்று பதிவிடப்பட்டு, லைவ் செய்யப்பட்டு வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் கார்த்தியிடம் ஏன் கேமை லைவ் செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பிய நிலையில், கார்த்தி இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அந்த பதிவில் "என்னுடைய ஃபேஸ்புக் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து ஃபேஸ்புக் குழுவோடு பேசி பிரச்னையை சரி செய்யும் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது” என்று தெரிவித்து இருக்கிறார் கார்த்தி.

Published by:Selvi M
First published:

Tags: Actor Karthi, Facebook hacked, Tamil News