ஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

ஆண் குழந்தைக்கு அப்பாவானார் நடிகர் கார்த்தி - மகிழ்ச்சியில் குடும்பத்தினர்

கார்த்தி - ரஞ்சனி, புகைப்படம் - ட்விட்டர்

நடிகர் கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது.

  • Share this:
அமெரிக்காவில் திரைத்துறை சம்பந்தமாக படித்து முடித்த கார்த்தி இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் ‘பருத்திவீரன்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான கார்த்தி, ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘பையா’, ‘மெட்ராஸ்’,‘காற்று வெளியிடை’, உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரானார்.

தற்போது ‘சுல்தான்’, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் கார்த்தி இன்று ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் சொல்லியிருக்கிறார். அவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்திருப்பதுதான் அந்த நற்செய்தி.

இதை தனது ட்விட்டரில் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்திருக்கும் கார்த்தி, “எனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. வாழ்வை மாற்றும் அனுபவத்தின் மூலம் எங்களை அழைத்துச் சென்ற எங்களுடைய மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும் நன்றி தெரிவிப்பது மட்டும் போதுமானது அல்ல. பிறந்த குழந்தைக்கு உங்கள் அனைவருடைய வாழ்த்துகளும் தேவை. நன்றி..” என்று கூறியுள்ளார்.

இதைத்தொடர்ந்து கார்த்திக்கு திரைத்துறையினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.கார்த்திக்கும் - ரஞ்சனிக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. 2013-ம் ஆண்டு இத்தம்பதிக்கு உமையாள் என்ற பெண்குழந்தை பிறந்தது.தற்போது 7 ஆண்டுகள் கழித்து இத்தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: