• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • செல்ஃபி எடுக்க வந்த கஸ்தூரி...மேடையில் கோபமான கார்த்தி!

செல்ஃபி எடுக்க வந்த கஸ்தூரி...மேடையில் கோபமான கார்த்தி!

நடிகர் கார்த்தி, கஸ்தூரி

நடிகர் கார்த்தி, கஸ்தூரி

செல்ஃபி என்ற விஷயத்துக்கு, ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது - நடிகர் கார்த்தி

  • News18
  • Last Updated :
  • Share this:
    படவிழாவில் தன்னுடன் செல்ஃபி எடுக்க வந்த நடிகை கஸ்தூரிக்கு மேடையிலேயே அறிவுரை கொடுத்தார் நடிகர் கார்த்தி.

    கே.சி.சுந்தரம் இயக்கத்தில் ஆனந்த் நாக், அஞ்சு குரியன், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் 'ஜூலை காற்றில்’. ஜோஸ்வா ஸ்ரீதர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

    இவ்விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் மற்றும் நடிகர் கார்த்தி ஆகிய இருவரும் கலந்துகொண்டார்கள். நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி தொகுத்து வழங்கினார். அப்போது நடிகர் கார்த்தியை மேடைக்கு பேச அழைத்த நடிகை கஸ்தூரி, கையில் செல்போனை வைத்துக்கொண்டு இங்கு வாங்களேன் நம்ம செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம் என்று அழைத்தார். மேலும் உங்க அப்பா இங்கு இல்லை. அதனால் அவசரமாக செல்ஃபி எடுத்துக்கொள்ளலாம் என்றும் நடிகை கஸ்தூரி கூறினார்.



    இதுதேவையில்லாத விஷயமாக இருக்கிறது என்று முகத்தைத் திருப்பிக்கொண்டு மேடையில் பேசத் தொடங்கிய நடிகர் கார்த்தி, “ செல்ஃபி என்ற விஷயத்துக்கு, ஒரு மரியாதையே இல்லாமல் போய்விட்டது. கேட்டுவிட்டு புகைப்படம் எடுப்பது என்றில்லாமல் முகத்துக்கு முன்னால் கேமராவை நிறுத்துகிறார்கள். பின்னால் ஒரு ஃபிளாஷ், முன்னால் ஒரு ஃபிளாஷ் என கண்ணில் பட்டால் என்ன ஆவான். ஒரு விவஸ்தையே கிடையாது.

    ஃபோட்டோ எடுப்பதைக்கூட மரியாதையாகக் கேட்டு எடுக்கத் தெரியாத அளவுக்கு ஆகிவிட்டோமோ என்று வருத்தமாக இருக்கிறது. இப்படிச் சொன்னால் தான் உண்டு. வேறு எங்கும் சொல்ல முடியாது” என்று பேசினார்.

    முன்னதாக தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிவகுமாருடன் ரசிகர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்ற போது மொபைல் போனை தட்டிவிட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    15 லட்சத்தின் கதை

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: