முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / Telugu cinema: லிங்குசாமி படத்தில் வில்லனாக இணைந்த ஆதி..

Telugu cinema: லிங்குசாமி படத்தில் வில்லனாக இணைந்த ஆதி..

நடிகர் ஆதி

நடிகர் ஆதி

லிங்குசாமி தெலுங்கில் இயக்கிவரும் படத்தில் வில்லனாக ஆதி நடிக்கவுள்ளார்.

  • Last Updated :

தமிழில் சண்டக்கோழி 2 படத்தை இயக்கிய லிங்குசாமி தனது அடுத்தப் படத்தை தெலுங்கில் இயக்குகிறார். ராம் பொத்னியேனி ஹீரோவாக நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் சென்றவாரம் தொடங்கியது. படப்பிடிப்புத்தளத்துக்கு ஷங்கர், பாரதிராஜா போன்றவர்கள் சென்று லிங்குசாமிக்கு வாழ்த்து தெரிவித்தனர். 

இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க முக்கிய நடிகரிடம் பேசி வருவதாக செய்திகள் வெளியாயின. தொடர்ந்து மாதவன் நடிப்பார் என வதந்தி பரவியது. இதனை மறுத்த மாதவன், லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், ஆனால், இந்தப் படத்தில் நடிக்கவில்லை எனவும் தெரிவித்தார். பிறகு ஆர்யா நடிப்பார் என வதந்தி பரவியது. ஆனால், இவையெதுவும் உண்மையில்லை. வில்லனாக நடிக்கப் போகிறவர் ஆதி.

தமிழில் நாயகனாக நடித்துவரும் ஆதி தெலுங்கில் ரேஸ் குர்ரம் உள்பட சில படங்களில் ஏற்கனவே வில்லனாக நடித்துள்ளார். அவரைதான் இப்போது ஒப்பந்தம் செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos
    First published:

    Tags: Telugu movie