சர்வதேச திரைப்பட விழாவில் ஜி.வி.பிரகாஷ் படம்!

நடிகர் ஜி.வி.பிரகாஷ்

 • News18
 • Last Updated :
 • Share this:
  நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ``சர்வம் தாள மயம்" படம், டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இசையமைப்பாளராக இருந்த ஜி.வி.பிரகாஷ் தற்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிரார்.

  ஜி4ஜி. ஐங்கரன், அடங்காதே, குப்பத்துராஜா, 100% காதல், ரெட்டைகொம்பு, கறுப்பர் நகரம் என பல படங்களில் ஜி.வி.பிரகாஷ்குமார் நாயகனாக நடித்து வருகிறார்.

  இந்நிலையில் நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள "சர்வம் தாள மயம்" படம், டோக்கியோ சர்வதேச திரைப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து, படத்தின் பின்னணி வேலைகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டோக்கியோவில் நடைபெறும் 31-வது சர்வதேச திரைப்பட விழாவில் இந்தப் படம் பிரத்யேகமாக திரையிடப்பட உள்ளது.

  இசையை மையப்படுத்திய இந்தப் படத்தை ராஜீவ் மேனன் இயக்கியுள்ளார். மின்சார கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களில் மம்முட்டி, பிரபு தேவா, அஜித் உள்ளிட்ட பிரபல நடிகர்களை வைத்து வெற்றி படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன்.

  தற்போது இவர் ஜி.வி.பிரகாஷை வைத்து இயக்கிய இந்தப் படம், சர்வதேச திரப்பட விழாவிற்கு தேர்வு செய்யப்பட்டது படக்குழுவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  Published by:Vinothini Aandisamy
  First published: