ராஜலட்சுமியின் படுகொலை, ஒவ்வொரு ஆணும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பெருங்கொடுமை என்று ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சாமுவேல். இவருக்கு சின்னப்பொன்னு என்ற மனைவியும் ராஜலட்சுமி என்ற மகளும் உள்ளனர். ராஜலட்சுமி 8-ம் வகுப்பு படித்து வந்தார்.
நெல் அறுவடை எந்திரத்தின் டிரைவராக பணிபுரியும் தினேஷ்குமார் என்பவர் ராஜலட்சுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாக குற்றம் சாட்டப்படுகிறது. இதனை தனது தாய் சின்னப்பொண்ணுவிடம் ராஜலட்சுமி கூறியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 22-ம் தேதி ராஜலட்சுமி வீட்டிலிருந்த போது தினேஷ்குமார், சாமிவேல் வீட்டுக்குள் புகுந்து ராஜலட்சுமியின் தலையைத் துண்டித்து கொலை செய்துள்ளார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஆத்தூர் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மீடூ விவகாரத்தைப் போல் ராஜலட்சுமி கொலைக்கு நீதிகேட்டு இந்த விவகாரத்தை பலரும் சமூகவலைதளங்களில் ட்ரெண்டாக்கியுள்ளனர்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டிருக்கும் ஜி.வி.பிரகாஷ், “தங்கை ராஜலட்சுமியின் பாலியல் படுகொலை ஒவ்வொரு ஆணும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பெருங்கொடுமை. ஆணாதிக்கமும், சாதிய ஆதிக்கமும் கூட்டுச் சேர்ந்து நிகழ்த்திய பச்சைப் படுகொலை” என்று கூறியுள்ளார்.
தங்கை ராஜலட்சுமியின் பாலியல் படுகொலை ஒவ்வொரு ஆணும் வெட்கித் தலைகுனிய வேண்டிய பெருங்கொடுமை.
ஆணாதிக்கமும், சாதிய ஆதிக்கமும் கூட்டுச் சேர்ந்து நிகழ்த்திய பச்சைப்படுகொலை#JusticeforRajalakshmi
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.