Arunraja Kamaraj Wife: நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் காலமானார்!

மனைவியுடன் அருண்ராஜா காமராஜா

அருண் ராஜா காமராஜின் மனைவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

  • Share this:
பிரபல இயக்குனர், பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜாவின் மனைவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ராஜா ராணி, மான் கராத்தா, மரகத நாணயம், க/பெ.ரணசிங்கள் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கும் அருண் ராஜா காமராஜா, பீசா, ஜிகர்தண்டா, காக்கி சட்டை, தெறி, கபாலி, காலா, மாஸ்டர், தர்பார் போன்ற பல படங்களில் பாடலாசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். பல படங்களில் பாடல்களும் பாடியுள்ளார்.

கோலமாவு கோகிலா படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த நிலையில், சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் 2018ல் வெளிவந்த கனா படத்தில் இயக்குனராக அறிமுகமானார்.

அருண் ராஜா காமராஜின் மனைவி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சையில் இருந்து வந்த அருண்ராஜா காமராஜாவின் மனைவி நள்ளிரவு சிகிச்சை பலனின்றி காலமானார். இதனையடுத்து அருண்ராஜா மனைவியின் மறைவுக்கு திரைத்துறையைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Read More:  ஃபேஸ்புக் காதலனால் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: 25 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யபட்ட கொடூரம்!

சமீப நாட்களாக திரைத்துறையைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வரும் நிலையில் தற்போது திரைத்துறை பிரபலம் ஒருவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் உயிரிழந்திருப்பது திரைத்துறையினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Published by:Arun
First published: