"எனக்கு இவர மாதிரி டான்ஸ் ஆடனும்னு ஆசை..." நடிகர் குறித்து தனுஷ் ட்வீட்

பட்டாஸ் படத்தில் தனுஷ்

  • News18
  • Last Updated :
  • Share this:
    எனக்கு இவர மாதிரி டான்ஸ் ஆடனும்னு ஆசை என்று பிரபல நடிகர் சாந்தனு குறித்து தனுஷ் தனது ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

    கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படம் கடந்த மார்ச் மாதத்தில் துவங்கியது. புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார்.

    இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். விவேக்-மெர்வின் இசையில் இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

    Also see... விஜய் பட நடிகை ரெபா மோனிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

    'அசுரன்', 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு பிறகு தனுஷ் நடித்துள்ள 'பட்டாஸ்' படம் வருகிற பொங்கலை முன்னிட்டு 2020, ஜனவரி 16 அன்று வெளியாகவுள்ளது.

    இந்நிலையில் இந்தப் படத்தின் 'Chill Bro’ என்ற பாடலை கடந்த 1-ம் தேதி படக்குழு வெளியிட்டிருந்தது. சமூக வலைதளத்தில் வைரலாகி வந்த இந்த பாடலுக்கு நடிகர் சாந்தனு தனது மனைவியுடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.



    இந்த வீடியோவை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வைரலாக்கினர். இதனை பார்த்த நடிகர் தனுஷ், இந்த வீடியோவை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது. சாந்தனு மாதிரி டான்ஸ் ஆட வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

    மேலும்  'Chill Bro’ என்ற இந்தப் பாடலை தனுஷ் எழுதி பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    Also see...
    Published by:Vinothini Aandisamy
    First published: