HOME»NEWS»ENTERTAINMENT»actor dhanush posted a happy tweet about master release vai

தியேட்டரில் மாஸ்டர் ரீலிஸ்.. மகிழ்ச்சியில் தனுஷ் பதிவிட்ட ட்வீட்

தீபாவளிக்கு மாஸ்டர் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளிக்கும் போது படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தியேட்டரில் மாஸ்டர் ரீலிஸ்.. மகிழ்ச்சியில் தனுஷ் பதிவிட்ட ட்வீட்
நடிகர் தனுஷ்
  • Share this:

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில்உருவான ‘மாஸ்டர்’ திரைப்படம் 2020 ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு அதற்கான வியாபாரங்கள் முழுவதும் பேசி முடிக்கப்பட்டன. ஆனால் கொரோனோ ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.

தற்போது திரையரங்குகள் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் நிலையில் 50% இருக்கைகளை நிரப்புவதற்கு மட்டுமே தமிழக அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. எனவே தீபாவளிக்கு மாஸ்டர் படத்தின் டீசரை வெளியிட்ட படக்குழு, திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அரசு அனுமதி அளிக்கும் போது படத்தை வெளியிட முடிவு செய்திருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது.

இதனிடையே முன்னணி ஓடிடி தளங்கள் ‘மாஸ்டர்’ படத்தைக் கைப்பற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் தயாரிப்பாளர் லலித்குமார், “மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் மட்டுமே வெளியாகும். பிரபல ஒடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் பொழுதும் திரையரங்குகளின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு காத்திருக்கிறோம். ரசிகர்கள் வதந்திகளை நம்பாமல் பொறுமை காக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.



இந்நிலையில் தயாரிப்பாளர் லலித் கூறியிருப்பதை மேற்கோள் காட்டி ஆம் என நடிகர் தனுஷ் ட்வீட் செய்துள்ளார். இதன் மூலம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படமும் திரையரங்குகளில் தான் வெளியாகும் என்பதை தனுஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜகமே தந்திரம் திரைப்படம் ஒடிடியில் வெளியாகும் என தொடர்ந்து செய்திகள் வெளிவந்த நிலையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனுஷ் இந்த செய்தியை குறிப்பால் உணர்த்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Vaijayanthi S
First published: