• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... பட்டாஸ் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்... பட்டாஸ் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு

பட்டாஸ் படத்தில் நடிகர் தனுஷ்

பட்டாஸ் படத்தில் நடிகர் தனுஷ்

  • Share this:
    'பட்டாஸ்' படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    கொடி பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் பட்டாஸ். புதுப்பேட்டை படத்துக்கு பின்னர் நடிகை சினேகா இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்திருக்கிறார். இவர்களுடன் மெஹ்ரின் பிர்ஜதா, நவீன் சந்திரா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு விவேக் - மெர்வின் என்ற இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். தொடர்ச்சியாக வெளியான படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.

    ஜனவரி 16-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் அவர்களுக்கு படக்குழுவினர் நல்ல செய்தி சொல்லியுள்ளனர். அதில் பட்டாஸ் படத்தின் ட்ரெய்லர் நாளை காலை 10.31 மணிக்கு வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது



    மேலும் படிக்க: மாஸ்டர் படக்குழுவின் புதிய அதிரடி அறிவிப்பு!

    Exclusive | நாங்கள் பிரிந்து விட்டோமா... நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஒரே பதில்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: