நடிகர் தனுஷ் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குனரான ருஸ்ஸோ இயக்கத்தில் ‘க்ரே மேன்’ என்ற படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர்களுடன் இணைந்து நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் பலர் இருந்தாலும் தனுஷின் நடிப்பிற்கு இருக்கும் ரசிகர் கூட்டமே தனிதான். 2002 ஆம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, புதுக்கோட்டையில் சரவணன் ஆகிய படங்களில் நடித்தார். பின்பு 2008 ஆம் ஆண்டு வெளியான யாரடி நீ மோகினி திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம் ஃபேர் விருதை பெற்றார். அதன்பின் வெளியான மூன்று, வேலையில்லா பட்டதாரி, மாரி, வடசென்னை, அசுரன் ஆகிய படங்கள் மாபெரும் வெற்றி பெற்றன.
இந்நிலையில் உலகம் முழுவதும் பெரும் ரசிகர்களை கட்டிப்போட்ட அவெஞ்சர்ஸ் திரைப்படத்தின் இயக்குனர் அந்தோனி மற்றும் ஜோ ருஸ்ஸோ இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஓடிடி தளமான நெட் ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு ‘தி க்ரே மேன்’ என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் பிரபல ஹாலிவுட் ஹீரோக்களான ரியான் கோஸ்லிங் மற்றும் கிறிஸ் இவான்ஸ் ஆகியோரும் தனுஷுடன் இணைந்து நடிக்க உள்ளனர். ஆக்ஷன் த்ரில்லர் ஆக உருவாக இருக்கும் இந்த படம் மார்க் க்ரேனேவின் நாவலை அடிப்படையாக கொண்டு உருவாகிறது.
Ryan Gosling x Chris Evans x Ana de Armas = THE GRAY MAN
A new film from directors Anthony & Joe Russo, the upcoming action thriller is based on the debut novel by Mark Greaney. pic.twitter.com/pfOAYfWDup
ஏற்கெனவே 2018 ஆம் ஆண்டு ‘the extraordinary journey of fakir ' என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் தனுஷ் நடித்தது குறிப்பிடத்தக்கது. இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து #TheGrayman என்ற ஹேஸ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
Published by:Tamilmalar Natarajan
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.