• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • மீண்டும் கைகோர்க்கும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி

மீண்டும் கைகோர்க்கும் தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ்

இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ்

  • News18
  • Last Updated :
  • Share this:
    நடிகர் தனுஷ் - இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாகவும், அந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லாதவன், ஆடுகளம் ஆகிய திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், தற்போது தயாராகியுள்ள வடசென்னை திரைப்படம் வரும் 17-ம் தேதி வெளியாக உள்ளது. சென்னையின் முப்பது ஆண்டுகால வரலாற்றை விவரிக்கும் விதமாக இந்தப் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டு, கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் படம் எடுக்கப்பட்டு வந்தது.

    தனுஷ் ஹீரோவாக நடிக்கும் இந்த படத்தில் இயக்குநர் அமீர், ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாரயணன் இசையமைத்துள்ளார். 

    இந்நிலையில் நான்காவது முறையாக தனுஷ் - வெற்றிமாறன் ஒரு படத்தில் இணைந்திருப்பதாகவும் இதன் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் மூன்று பாகங்களாக உருவாகும் வட சென்னை படத்தின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு இறுதியில் தொடங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vinothini Aandisamy
    First published: