துள்ளுவதோ இளமை படம் வெளிவந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து தனுஷூக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரசிகர்களின் வாழ்த்துக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ட்விட்டரில் கருத்து பதிவிட்ட நடிகர் தனுஷ், அருமை நண்பர்களே, துள்ளுவதோ இளமை 2002-ம் ஆண்டு மே 10-ம் தேதி வெளியானது. எனது வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றிய நாள். நிஜமாகவே 17 வருடங்கள் ஆனதா?
இலக்கில்லா அவனால் நட்சத்திரமாக அல்ல நடிகனாகக் கூட முடியுமா என்று தெரியாத இந்த சிறுவனுக்கு நேற்றுதான் நீங்கள் ஆதரவளித்தது போல் இருக்கிறது. எனது வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும்போது என் மீது நீங்கள் நம்பிக்கை வைத்ததற்கு நன்றியுணர்ச்சி பொங்குகிறது.
என்னுடைய கெட்ட நேரங்கள், வெற்றி, தோல்விகளில் எனக்கு ஆதரவாக இருந்துள்ளீர்கள். நான் மிகச்சரியான மனிதன் அல்ல. ஆனால் உங்களுடைய நிபந்தனையற்ற ஆதரவு மேலும் என்னை உழைக்க வைத்து முழுத்திறமையை வெளிப்படுத்தத் தூண்டுகிறது.
17 years !! Thank you all 🙏🙏🙏 pic.twitter.com/nAcqNjy19g
— Dhanush (@dhanushkraja) May 10, 2019
17 வருட நிறைவையொட்டி நீங்கள் அனுப்பியுள்ள போஸ்டர்களும், வீடியோக்களும், அதிக ஊக்கத்தையும் நேர்மறை எண்ணங்களையும் அளித்துள்ளன. அன்பை மட்டும் அனைவருக்கும் பகிர்வோம். நம்மைப் போன்றவர்கள் அதிகம் கனவு காணக்கூடிய உலகைப் படைப்போம்” என்று கூறியுள்ளார்.
வீடியோ பார்க்க: யூடியூப் சென்சேஷனலாக உருவெடுத்துள்ள நடிகை சாய் பல்லவி!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dhanush