விஜய்யின் மாஸ்டர் தியேட்டரில் வெளியாவது மகிழ்ச்சியளிக்கிறது - தனுஷ்

தனுஷ் | விஜய்

விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்கில் வெளியாவது மகிழ்ச்சியளிப்பாதாக நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ‘மாஸ்டர்’ திரைப்படம் 2021-ம் ஆண்டு பொங்கல் விழாவை முன்னிட்டு ஜனவரி 13-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தியேட்டர்களில் 50% இருக்கைகளை மட்டுமே நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில நடிகர் விஜய் சமீபத்தில் தமிழக முதல்வரை சந்தித்து திரையரங்குகளில் நூறு சதவிகிதம் பார்வையாளர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் தியேட்டர் உரிமையாளர்கள், பணியாளர்கள், திரைப்பட விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் என பெரும்பாலானோர் பொருளாதார ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து நவம்பர் 10-ம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட்டாலும் பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவராததால் மக்கள் கூட்டம் தியேட்டர்களுக்கு வரவில்லை. இதனால் ஏராளமான திரையரங்குகள் மூடப்பட்டன. மாஸ்டர் திரைப்படம் வெளியானால் மக்கள் கூட்டம் திரையரங்கை நோக்கி வரும் என்று கணக்குப் போட்டு காத்திருந்த தியேட்டர் உரிமையாளர்களுக்கு மாஸ்டர் ரிலீஸ் செய்தி மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் மாஸ்டர் திரைப்படம் தியேட்டரில் வெளியாவது மகிழ்ச்சியளிப்பதாக ட்வீட் செய்திருக்கிறார். மேலும் திரையரங்கில் திரைப்படம் பார்ப்பது போல அனுபவத்தை வேறு தளங்களால் ஏற்படுத்த முடியாது எனவும் தெரிவித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என செய்திகள் வெளியான நிலையில் அதனை தனுஷ் இந்த செய்தியின் மூலம் மறுத்துள்ளார்.கொரோனா ஊரடங்கு காலத்தில் சூர்யாவின் சூரரைப்போற்று, ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட பல திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் ரிலீஸ் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: