தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக இயக்குனரும் நடிகருமான சேரன் கூறியுள்ளார்.
சென்னையில் நடைபெற்ற ’நயாப் காலண்டர்’ வெளியீட்டு விழாவில் பங்கேற்றபோது இவ்வாறு பேசியுள்ளார்.
ஃபேஷன் டிசைனர் ஃபைசாகானின் இந்த காலண்டருக்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட்டில் பிக்பாஸ் புகழ் சாக்சி அகர்வால் மாடலாக நடித்துள்ளார். அந்த காலண்டருக்காக எடுக்கப்பட்ட ஃபோட்டோக்களையும், ஃபோட்டோஷூட் வீடியோக்களையும் சாக்ஷி தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
அது சமூகவலைதளங்களிலும் வைரலாகப் பேசப்பட்டது. இந்நிலையில் சாக்சி இடம்பெற்ற காலண்டர் பக்கத்தை சேரன் வெளியிட்டார். வெளியிட்டபின் செய்தியாளர்களை சந்தித்த சேரன் தன்னை விளம்பரப்படுத்திக்கொள்ளவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதாகக் கூறினார்.
மேலும் திரையில் வெற்றிகரமாக ஓடிய பிரேமம் மற்றும் 96 படங்கள் ஆட்டோகிராஃப் சாயலில் இல்லை என்று கூறினார்.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.