மாரடைப்பு சிகிச்சைக்காக உதவி கோரிய நகைச்சுவை நடிகர் பெஞ்சமின்

மாரடைப்பு சிகிச்சைக்காக உதவி கோரிய நகைச்சுவை நடிகர் பெஞ்சமின்

நடிகர் பெஞ்சமின்

மாரடைப்பால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் திரைத்துறை நண்பர்களிடம் உதவி கோரியுள்ளார்.

  • Share this:
மேடை நாடக கலைஞரான பெஞ்சமின் சேரன் இயக்கத்தில் வெளியான ‘வெற்றிக்கொடிகட்டு’ திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அந்தப் படத்தில் வடிவேலுவை இவர் திட்டும் நகைச்சுவைக்காட்சி மிகவும் பிரபலமானது. அதைத்தொடர்ந்து திருப்பாச்சி படத்தில் விஜய்க்கு நண்பராகவும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். 40-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வரும் பெஞ்சமின் சேலத்தில் வசித்து வந்தார்.

இந்நிலையில் திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று நாட்கள் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் அந்த மருத்துவமனையில் மேல் அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால் பெங்களூரு நாராயணா ஹிருதயாலயா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இதனிடையே மருத்துவ சிகிச்சைக்காக திரைத்துறையைச் சேர்ந்த நண்பர்களிடம் உதவி கோரியும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

ரசிகர்கள் பலரும் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: பிக்பாஸ் பாலாஜிக்கும் எனக்கும் என்ன உறவு? - முதல்முறையாக யாஷிகா பதில்

கொரோனா பெருந்தொற்று காலத்தில் திரைத்துறையைச் சேர்ந்த அங்காடித் தெரு பட நடிகை சிந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பண உதவி கோரியிருந்தார். அதேபோல் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் நடித்திருந்த நடிகர் தவசி சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நடிகர் பொன்னம்பலமும் கொரோனா காலத்தில் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பணமின்றி அவதிப்பட்டார். அப்போது அவருக்கு நடிகர் கமல்ஹாசன், சரத்குமார், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் உதவி செய்ததும் குறிப்பிடத்தக்கது.
Published by:Sheik Hanifah
First published: