• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • யாஷிகா எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த நடிகர் கொடுத்த அப்டேட் ..

யாஷிகா எப்படி இருக்கிறார்? நேரில் சந்தித்த நடிகர் கொடுத்த அப்டேட் ..

யாஷிகா ஆனந்த்

யாஷிகா ஆனந்த்

விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகை யாஷிகாவின் உடல்நிலை பற்றி நடிகர் அசோக்குமார் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
இளம் கவர்ச்சி புயலாக வளர்ந்து வந்த யாஷிகா ஆனந்த், இரட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற திரைப்படத்தில் லீட் ரோலில் நடித்து பரவலான கவனத்தைப் பெற்றார். 2015ம் ஆண்டே நகைச்சுவை நடிகர் சந்தானத்துடன் இணைந்து ஒரு படம் நடித்திருந்தாலும், அந்தப் படம் திரைக்கு வரவில்லை. பாடல் காட்சி படமாக்குவதற்கு யாஷிகா செல்லாததால், அவர் தொடர்பான காட்சிகளும் படத்தில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தது.

பின்னர், பிக்பாஸ் சீசன் 2வில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். அந்த சீசனுக்குப் பிறகு இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை திணறடித்து வந்தார். பட வாய்ப்புகளும் அவருக்கு தொடர்ச்சியாக கிடைக்கத் தொடங்கியது. எஸ்.ஜே. சூர்யாவுடன் கடமையை செய் படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். இந்த படம் இறுதிக்கட்டத்தில் இருக்கும் போதே மேலும் பல படங்களில் நடிக்க யாஷிகா ஒப்பந்தமானார். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 25ம் தேதி எதிர்பாரதவிதமாக விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார்.

அன்றிரவு புதுச்சேரியில் இருந்து நண்டபர்களுடன் காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்த யாஷிகா, அவரே காரை ஓட்டி வந்துள்ளார். மாமல்லபுரம் அருகே கார் வந்து கொண்டிருந்தபோது, மின்னல் வேகத்தில் வந்த காரானது கட்டுப்பாட்டை இழந்து சாலையின் சென்டர் மீடியனில் மோதியது. இந்த எதிர்பாரத விபத்தில் காரில் அவருடன் பயணித்த யாஷிகாவின் நெருங்கிய தோழியான வள்ளிச்செட்டி பவானி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகாவுக்கு இடுப்பு, கால், தோள்பட்டை உள்ளிட்ட பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

also read : திருப்பதியில் நயன்தாரா விக்னேஷ் சிவன் சுவாமி தரிசனம்!

மருத்துவமனையில் இருந்தவாறு தன்னுடைய புகைப்படத்தை அண்மையில் சமூகவலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அப்போது, சிகிச்சையில் இருந்து தேறி வருவதாகவும், படுத்த படுகைக்கையாகவே இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். அப்போது இருந்து யாஷிகாவின் உடல்நிலை குறித்த தகவல்களை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில், கடமையை செய் படத்தில் யாஷிகாவுடன் நடித்த நடிகர் அசோக், யாஷிகாவை தனது மனைவியுடன் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.also read : விஜய் தேவரகொண்டா படத்தில் கௌரவ வேடத்தில் தோன்றும் மைக் டைசன்!

அதன்பிறகு யாஷிகா மற்றும் அவரது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், யாஷிகா வேகமாக குணமடைந்து வருவதாக தெரிவித்துள்ளார். எனக்கும், எனது குடும்பத்திற்கும் சிறந்த தோழியாக இருக்கும் அவர் மனதளவிலும், உடல் ரீதியாகவும் மீண்டு வர வேண்டும் எனவும் அசோக் கூறியுள்ளார். ஆனால், யாஷிகாவுடன் இருக்கும் புகைப்படம் தான் ரசிகர்களுக்கு கேள்வியை எழுப்பியுள்ளது.

விபத்தில் சிக்கி படுத்த படுக்கையாக இருக்கும் யாஷிகா, முழுமையாக குணமாக இன்னும் 5 மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் கூறிய நிலையில், அந்தப் புகைப்படத்தில் யாஷிகா சாதாரணமாக நிற்கிறார். இதனால், யாஷிகாவுடன் அசோக் எடுத்துக் கொண்ட இந்தப் புகைப்படம் தற்போதையதாக இருக்க வாய்ப்பில்லை என நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: