ஹோம் /நியூஸ் /பொழுதுபோக்கு /

மீண்டும் அரவிந்த்சாமிக்கு வில்லனாகும் அர்ஜூன்!

மீண்டும் அரவிந்த்சாமிக்கு வில்லனாகும் அர்ஜூன்!

அர்ஜூன் -நடிகர்

அர்ஜூன் -நடிகர்

இயக்குநர் நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி நடித்து வரும் படத்தில் அர்ஜூன் வில்லனாக நடிக்கிறார்.

  • News18
  • 1 minute read
  • Last Updated :

கடல் படத்தை அடுத்து மீண்டும் நடிகர் அரவிந்த் சாமிக்கு வில்லனாக அர்ஜூன் நடிக்கிறார்.

‘கடல்’ படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்த அரவிந்த் சாமி, ‘தனி ஒருவன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்தார். அதில் அவருடைய கேரக்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

மீண்டும் போகன் படத்திலும் அதே கூட்டணி தொடர்ந்தது. அதன் பிறகு வில்லனாக தொடராமல் ஹீரோவாக நடித்து வருகிறார் அரவிந்த் சாமி. ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் ஹீரோவாக நடித்த அவர், ‘சதுரங்க வேட்டை 2’, ‘நரகாசூரன்’, ‘கள்ளபார்ட்’ ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடித்துள்ளார்.

தற்போது ‘சதுரங்க வேட்டை 2’ பட இயக்குநர் நிர்மல் குமார் இயக்கத்தில் மற்றொரு படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், வில்லனாக நடிக்க அர்ஜுன் ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கெனவே இருவரும் கடல் படத்தில் நடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பழைய காதல் வாழ்க்கை புதிய உறவில் இணையத் தடையாக இருக்கிறதா ?

எக்ஸெட்ரா என்டெர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்தப் படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ஸ்ரீரெட்டியின் நள்ளிரவு நாடகம் அம்பலமானது எப்படி? - வீடியோ

First published:

Tags: Actor Arjun