முதல் படத்திற்காக கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற அருண் விஜயின் மகன்...

முதல் படத்திற்காக கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற அருண் விஜயின் மகன்...

நடிகர் அருண் விஜயின் மகன்

நடிகர் அருண் விஜயின் மகன் ஆர்னவ் சூர்யா தயாரிப்பில் உருவாகும் படத்தில் நடிக்க கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றுள்ளார்.

 • Share this:
  சூர்யாவின் 2டி எண்டர்டைமெண்ட் தயாரிப்பில் 36 வயதினிலே, பசங்க 2, மகளிர் மட்டும்,க டைக்குட்டி சிங்கம், 24, பொன்மகள் வந்தாள், சூரரைப் போற்று என பல படங்கள் வெளிவந்துள்ளது. அதில் 2015 ஆம் ஆண்டு பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் பசங்க 2. இரண்டு ஹைபர் ஆக்டிவ் குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்களின் மனநிலை மற்றும் அதை சரி செய்ய டாக்டர் ஆன சூர்யா உதவும் வகையில் கதை அமைந்திருந்தது. இந்த படம் பெற்றோர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப்பெற்றது.

  மக்களுக்கு பிடித்த தரமான திரைப்படங்களை கொடுத்து வரும் 2டி எண்டர்டைமெண்ட், மீண்டும் சரோவ் சண்முகம் இயக்கத்தில் குழந்தைகளை மையமாக வைத்து படம் எடுக்க முடிவு செய்துள்ளனர். இந்த படத்தின் பூஜை டிசம்பர் 14 ஆம் தேதி நடைப்பெற்றது. இந்த படத்தில் அருண் விஜயின் மகன் ஆர்னவ் நடிகராக அறிமுகமாகிறார்.

  இந்த படத்தின் கதையானது குழந்தைக்கும், அந்த குழந்தை வளர்க்கும் செல்லப்பிராணிக்கும் இடையேயான அன்பினை வெளிகாட்டும் படமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் ஊட்டியில் நடைபெறவுள்ளது.  இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அருண் விஜயின் 9 வயதான மகன் ஆர்னவ் சென்னையில் மிகவும் பிரபலமான ‘கூத்துப்பட்டறை’ அக்காடமியில் நடிப்பது குறித்து பயிற்சி பெற்றுள்ளார். இந்த படமானது வண்ணங்கள் நிறைந்த குடும்ப படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Tamilmalar Natarajan
  First published: