லிவிங்ஸ்டன் மகளை தொடர்ந்து "பூவே உனக்காக" சீரியலை விட்டு விலகிய அருண்!

நடிகர் அருண்

பூவே உனக்காக சீரியலில் இதுவரை ஹீரோவாக நடித்த அருண், தற்போது இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

  • Share this:
பிற சேனல்களை போலவே சன் டிவி-யிலும் திரைப்பட டைட்டில்களை கொண்ட பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கி தற்போது வரை ஒளிபரப்பாகி வரும் "பூவே உனக்காக சீரியல்" சன் டிவியின் ஹிட் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. சன் டிவியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வருகிறது "பூவே உனக்காக" சீரியல். இந்த சீரியலில் இதுவரை ஹீரோவாக நடித்த அருண், தற்போது இந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பூவே உனக்காக சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ளார் அருண். இந்நிலையில் பூவே உனக்காக சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்களை, அருணின் அறிவிப்பு ஏமாற்றமடைய செய்துள்ளது.

"பூவே உனக்காக" சீரியல் கதையில் சிறந்த தோழிகளாக இருக்கும் பூவரசி மற்றும் கீர்த்தி தங்களது நட்பு எப்போதும் நிலைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். பூவரசிக்கு விருப்பமில்லாமல் வீட்டில் திருமண ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதனிடையே கீர்த்தியிடம் காதல் வயப்படுகிறான் பணக்கார மற்றும் அழகான இளைஞனான நாயகன் கதிர் (அருண்). ஆனால் விதி காரணமாக பூவரசியை கதிர் திருமணம் செய்து கொள்கிறான். இந்த திருமணத்திற்கு பிறகு பூவரசி, கதிர் மற்றும் கீர்த்தியின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் மாற்றங்களை இந்த தொடர் ரசிகர்களுக்கு ஒளிபரப்புகிறது.

Also Read :  ரோஜா சீரியலில் இருந்து விலகியது ஏன்? வில்லியாக நடிக்கும் அனு ஓபன்டாக்

சீரியலில் முதன்மை கதாபாத்திரங்களான பூவரசியாக ராதிகா பிரீத்தி, கதிராக அருண் நடித்து வந்தனர். மற்றொரு பாத்திரமான கீர்த்தியாக நடிகர் லிவிங்க்ஸ்டனின் மகள் ஜோவித்தா நடித்தார். ஆனால் உயர் கல்வி படிப்பை தொடர இந்த சீரியலில் இருந்து விலகுவதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன் ஜோவித்தா விலகினார். இவரை தொடர்ந்து முக்கிய வேடத்தில் நடிக்கும் அருணும் சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சீரியலுக்கு முன் சில விளம்பரங்களில் நடித்துள்ளார் நடிகர் அருண்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சீரியல் தான் சின்னத்திரையில் அவருக்கு முதல் சீரியல். இந்த நிலையில் அருண் இந்த சீரியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். தனது இந்த முடிவு குறித்து இன்ஸ்டாவில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ள நடிகர் அருண், "சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக சீரியலில் இருந்து நான் விலகியுள்ளேன் என்பதை அனைவருக்கும் சொல்லி கொள்கிறேன். இனி என்னை நீங்கள் கதிர் கதாபாத்திரத்தில் பார்க்க முடியாது. எனக்கு சிறந்த வாய்ப்பு தந்த தயாரிப்பாளர் மற்றும் சன் டிவிக்கு மனமார்ந்த நன்றியை கூற விரும்புகிறேன். உங்களின் ஆதரவின்றி நான் இன்று இருக்கும் இந்நிலைக்கு என்னால் வந்திருக்க முடியாது.
எனக்கு தொடர்ந்து அன்பும், ஆதரவும் அளித்து வரும் நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன். கவலைப்படாதீர்கள்..! விரைவில் உங்கள் அனைவரையும் ஒரு நல்ல செய்தியுடன் சந்திக்கிறேன். மீண்டும் உங்கள் அனைவருக்கும் நன்றி. உங்கள் அன்பும் ஆதரவும் எனக்கு என்றும் தேவை" என்று அருண் கூறியுள்ளார். எனினும் இந்த பதிவில் சீரியலில் இருந்து விலக்கியதற்கான காரணம் என்னவென்று அருண் கூறவில்லை.

x
Published by:Vijay R
First published: