சிம்புவின் அடுத்த படத்தில் இணையும் ஆக்‌ஷன் கிங்!

நடிகர்கள் அர்ஜூன், சிம்பு

நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில் அவருடன் நடிகர் அர்ஜூன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நடிகர் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தில்,  நடிகர் அர்ஜூன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் த்ரி விக்ரம் இயக்கத்தில் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான படம்`அத்திரண்டிகி தாரேதி’. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கை இயக்குநர் சுந்தர்.சி இயக்குகிறார். வந்தா ராஜாவா தான் வருவேன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடிக்கிறார். இவர்களுடன் கேத்ரின் தெரெசா, மஹத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை அடுத்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் சிம்பு நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ம் ஆண்டில் பிப்ரவரி மாதத்தில் சிம்புவின் பிறந்த நாளன்று துவங்க இருக்கிறது. படத்தில் நடிக்க இருக்கும் முக்கிய கதாபாத்திரங்களுக்கான தேர்வு நடைபெற்று வரும் நிலையில் படத்தின் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடிகர் அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தில் நடிகர் அர்ஜூன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

நடிகர் அர்ஜூன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த இரும்புத்திரை படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் அஜித்துடன் மங்காத்தா படத்தில் அர்ஜுன் நடித்திருந்த கதாபாத்திரம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றிருந்தது. இதனால் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்திலும் நடிகர் அர்ஜூனை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

கூட்டணி அமைக்கும் பெரிய கட்சிகள்... தாக்குப்பிடிப்பார்களா கமல், ரஜினி? - அரசியல் ஆரம்பம் - வீடியோ

Published by:Sheik Hanifah
First published: