• HOME
  • »
  • NEWS
  • »
  • entertainment
  • »
  • நீதிமன்றம் சொன்னாலும் மறுதேர்தல் நடத்த நடிகர் சங்கத்தில் பணம் இல்லை - கருணாஸ்

நீதிமன்றம் சொன்னாலும் மறுதேர்தல் நடத்த நடிகர் சங்கத்தில் பணம் இல்லை - கருணாஸ்

கருணாஸ்

கருணாஸ்

  • Share this:
    நீதிமன்றம் மறுதேர்தல் நடத்த சொன்னாலும் அதற்கு தற்போது நடிகர் சங்கத்தில் பணம் இல்லை என்று கருணாஸ் தெரிவித்துள்ளார்.

    புதுக்கோட்டையில் நடைபெற்ற நாடக நடிகர் சங்கத்தின் விழாவில் கலந்து கொண்ட நடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடிகர் சங்கப் பிரச்னையில் ஐசரி கணேசன் எங்கள் மீது விமர்சனம் செய்து வருகிறார். ஆனால் அவருக்குத்தான் நீதிமன்றம் ரூ. 10 லட்சம் அபதாரம் விதித்துள்ளது.அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்காக சங்கத்தின் உறுப்பினர்களை பணம் கொடுத்து விலைக்கு வாங்கியது யார் என்று அனைவருக்கும் தெரியும். அதைப் பற்றி நான் பேச விரும்பவில்லை.

    ஐசரி கணேசன் தன்னைத்தானே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். எங்களின் சட்ட ரீதியான போராட்டம் தொடரும். நீதி கிடைக்கும் என நாங்கள் நம்புகிறோம். நடிகர் சங்க சொத்து என்பது தனி நபருடைய சொத்தல்ல. அதற்கு தனிப்பட்ட நபர்கள் யாரும் உரிமை கொண்டாட முடியாது. மீண்டும் நடிகர் சங்கத் தேர்தல் அறிவிக்கும் போது தான் ஏற்கனவே எங்கள் அணியில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மீண்டும் போட்டியிடுவார்களா என்பது தெரியவரும்.

    நான் பதவி வெறி பிடித்தவன் அல்ல. பதவிக்காக எத்தனை லட்சங்கள் வேண்டுமானாலும் செலவு செய்வதற்கு நான் ஒன்றும் முட்டாளுமில்லை. தற்போது சங்கமே முடங்கிப் போயுள்ளது.  சங்கத்தில் பணமும் இல்லை. நீதிமன்றம் மறுபடியும் நடிகர் சங்கத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சொன்னாலும் தேர்தலை நடத்துவதற்கு சங்கத்தில் பணம் இல்லை” என்றார்.

    மேலும் படிக்க: தனுஷ் - கார்த்திக் சுப்புராஜ் பட ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sheik Hanifah
    First published: