Home /News /entertainment /

தனுஷின் ‘கர்ணன்’ படத்தை தடை செய்து மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் - கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு

தனுஷின் ‘கர்ணன்’ படத்தை தடை செய்து மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் - கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை எதிர்ப்பு

கருணாஸ், தனுஷ்

கருணாஸ், தனுஷ்

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    தனுஷின் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று முக்குலத்தோர் புலிப்படை சார்பில் போலீசில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் தனுஷ் நடித்து வரும் படம் கர்ணன். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வரும் நிலையில் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும் என்றும், மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்றும் கருணாஸின் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு சார்பாக காவல்துறை தலைவரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் மாநில அமைப்பு செயலாளரும் நெல்லை மாநகர் தெற்கு மாவட்டச் செயலாளருமான பவானி வேல்முருகன், காவல்துறை துணைத் தலைவர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, “1991-ல் கொடியன்குளம் மணியாச்சி சாதி கலவரத்தை மையப்படுத்து எடுக்கப்பட்டு வரும் கர்ணன் படத்தை தடை செய்ய வேண்டும். மற்றும் அந்த படத்தின் படப்பிடிப்பை திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டத்தில் எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும்.



    தென்மாவட்டங்களில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகின்ற நிலையில் இதுபோன்ற திரைப்படங்களால் மீண்டும் ஒரு கலவர சூழ்நிலை ஏற்படுகிறது. ஆகையால் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மற்றும் அந்தத் திரைப்படத்தில் மணியாச்சி காவல்நிலையம் என்று பெயரிட்டு அந்த காவல்நிலையத்தை தனுஷ் தாக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இது காவல்துறை கண்ணியத்தையும் கெடுப்பதாக அமைகிறது.



    குறிப்பாக அந்தத் திரைப்படத்தில் தேவர் சமூகத்தை மிகவும் விமர்சித்து வருகிற மாதிரி காட்சிகள் இடம்பெறுகிறது. தொடர்ந்து இதுபோன்ற திரைப்படஙகள் எடுத்து இரு சமூக மக்களிடையே சாதி கலவரத்தை தூண்டி வருகிற மாரி செல்வராஜை கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” இவ்வாறு அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க: மாஸ்டரை அன்புடன் முத்தமிட்ட விஜய் சேதுபதி - ஷூட்டிங்கில் நடந்த சுவாரஸ்யம்
    Published by:Sheik Hanifah
    First published:

    அடுத்த செய்தி