விபசாரத்திற்கு பெண்களை சப்ளை செய்ததாக பாலிவுட் நடிகை கைது...!

அம்ரிதா

 • News18
 • Last Updated :
 • Share this:
  விபசாரத்திற்கு பெண்களை ஈடுபடுத்தியதாக பாலிவுட் நடிகை அம்ரிதா கைது செய்யப்பட்டுள்ளது, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள கோரேகாவ்ன் பகுதியில் இருக்கும் 5 ஸ்டார் ஹோட்டலில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார், போலியாக வாடிக்கையாளர்களை உள்ளே அனுப்பி அங்கு விபசாரம் நடப்பதை உறுதி செய்தனர்.

  கிளிக்: விபசார வழக்கில் சிக்கிய நடிகை அம்ரிதா புகைப்படங்கள்

  இதையடுத்து ஹோட்டலுக்குள் நுழைந்த போலீஸ் துணை கமிஷனர் டி.எஸ்.சுவாமி தலைமையிலான போலீசார் அங்கு விபசாரத்தில் ஈடுபட்டு இருந்த 2 பெண்களை மீட்டனர்.
  விபசாரத்திற்கு பெண்களை சப்ளை செய்த பாலிவுட் நடிகை அம்ரிதா தனோவா(32) மற்றும் மாடல் அழகி ரிச்சா சிங் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

  அம்ரிதா மற்றும் ரிச்சா ஸ்டார் ஹோட்டல்களில் நடக்கும் விபசார தொழிலுக்கு பெண்களை சப்ளை செய்து வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

  பிக்பாஸ் 13 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அர்ஹான் கானின் முன்னாள் காதலி தான் இந்த அம்ரிதா என்பது குறிப்பிடத்தக்கது. விபசார வழக்கில் நடிகை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் பார்க்க:
  Published by:Sankar
  First published: