முகப்பு /செய்தி /பொழுதுபோக்கு / அஜித்தின் விஸ்வாசம்: 2-வது போஸ்டரில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

அஜித்தின் விஸ்வாசம்: 2-வது போஸ்டரில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

அஜீத்தின் விஸ்வாசம் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

அஜீத்தின் விஸ்வாசம் பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Ajith in Viswasam: அஜித் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் 2வது போஸ்டர் வெளியாகியுள்ளது. போஸ்டரில் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்று குறிப்புணர்த்தி இருக்கிறார்கள்.

  • Last Updated :

அஜீத் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் 2-வது போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. படம் பொங்கலுக்கு ரிலீஸ் என்பதை 2-வது போஸ்டர் மூலம் படக்குழு உறுதி செய்துள்ளனர்.

இயக்குநர் சிவா- அஜித் கூட்டணியில் உருவாகி வரும் படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். மதுரை மற்றும் தேனியை பின்னணியாகக் கொண்டு உருவாகி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Viswasam, Ajith, 2nd Poster
அஜீத் நடிக்கும் விஸ்வாசம் படத்தின் 2-வது போஸ்டர்

சமீபத்தில் இந்தப் படத்தில் தெலுங்கு நடிகரான ரவி அவானா இணைந்தார். இதைத்தொடர்ந்து படத்தில் இரண்டு கதாபாத்திரங்களில் நடிகர் அஜித் நடித்து வருவதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் `தூக்கு துரை' என்ற தகவல்கள் வெளியாகின.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் ஈடுபட்ட வருகின்றனர். இந்நிலையில் இன்று விஸ்வாசம் படத்தின் 2-வது போஸ்டரை வெளியிட்டனர். இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி அன்று வெளியானது குறிப்பிடத்தக்கது.

Also see...

First published:

Tags: Actor Ajith, Viswasam