சென்னையை பாதுகாக்கும் பணியில் அஜித்... தக்‌ஷா குழுவின் புதிய அசைன்மெண்ட்!

சென்னையை பாதுகாக்கும் பணியில் அஜித்... தக்‌ஷா குழுவின் புதிய அசைன்மெண்ட்!
  • News18
  • Last Updated: October 27, 2018, 6:58 PM IST
  • Share this:
அஜித் ஆலோசகராக இருந்த தக்‌ஷா குழு தீபாவளி சமயத்தில் பாதுகாப்பு பணிக்காக களமிறங்க உள்ளது.

தியாகராய நகரில் பிரமாண்டமான ஜவுளிக்கடை, நகைக் கடைகள் உள்ளதால் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பது வழக்கம். தற்போது தீபாவளி பண்டிகைக்காக ஆடைகள், அணிகலன்கள் வாங்குவதற்காக மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இதையொட்டி பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், ஆர்-1 காவல் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை, சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குற்றவாளிகளின் முகத்தை எளிதில் கண்டுகொள்ளும் வகையில் நவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார். மேலும், ட்ரோன் எனப்படும் பறக்கும் கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் கண்காணிப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.




இந்த பாதுகாப்பு பணிக்காக அஜித்தின் தக்‌ஷா குழுவினர் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா குழு பல்வேறு சாதனைகளைப் படைத்திருந்தது. மேலும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் நடைபெற்ற யூஏவி மெடிக்கல் எக்ஸ்பிரஸ் சேலஞ்சில் சிறப்பாக செயல்பட்டு சர்வதேச போட்டியில் தக்‌ஷா குழு 2-ம் இடம்பிடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
First published: October 27, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading