Home /News /entertainment /

சமூகவலைதளங்களில் இணைகிறேன்... பரபரப்பைக் கிளப்பிய அறிக்கைக்கு அஜித் தரப்பில் பதில்!

சமூகவலைதளங்களில் இணைகிறேன்... பரபரப்பைக் கிளப்பிய அறிக்கைக்கு அஜித் தரப்பில் பதில்!

அஜித்

அஜித்

நடிகர் அஜித் சமூகவலைதளங்களில் இணைவதாக வெளியான பரபரப்பு அறிக்கை குறித்து அஜித் தரப்பில் பதிலளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் அஜித் சமூகவலைதளங்களில் இணைவதாக அறிக்கை ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த அறிக்கையில், “என்னுடைய ரசிகர்களுக்கான ஓர் அறிக்கை. நான் பல வருடங்களுக்கு முன்னர் அனைத்து சமூகவலைதளங்களிலிருந்தும் ஒதுங்கியிருந்ததுடன் எனக்கான மன்றங்களையும் கலைத்திருந்தேன். இதற்கான காரணங்களை பல முறை நான் உங்களிடம் தெரிவித்திருந்தேன். இந்நிலையில், தற்போது மீண்டும் சமூகவலைதளங்களில் இணைய வேண்டிய காலம் வந்துவிட்டது.

அந்த வகையில் இந்த அறிக்கையின் மூலம் இது என்னுடைய உத்தியோகப்பூர்வ முகப்புத்தகம் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன் இதன் மூலம் நீங்கள் என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்.

போலியான அறிக்கை


மேலும் இதனை காரணமாக வைத்து சமூக வலைதளங்களில் எனது ரசிகர்கள் எந்தவித தவறான செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது என கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் அதில் அஜித் குமாரின் கையொப்பமும் இடம்பெற்றிருந்தது.

இதுகுறித்து அஜித் குமார் தரப்பில் விசாரித்தபோது, அது அவரது அறிக்கையைப் பார்த்து முகம் தெரியாத நபரால் உருவாக்கப்பட்டுள்ளது. அவரது அறிக்கைகள் தி.நகரில் உள்ள அலுவலகத்திலிருந்து தான் வெளியிடப்படும். இதுவரை அவர் தமிழில் அறிக்கைகள் கொடுத்ததில்லை. இந்த போலியான அறிக்கையைப் பார்த்து அஜித்தே வியந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

கடைசியாக நடிகர் அஜித், தனது ரசிகர்கள் பாஜகவில் இணைந்த செய்தி அறிந்து தனது அரசியல் நிலைப்பாட்டை விளக்கி அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: எப்படி இருந்த நான்... 7 மாதங்களில் நடந்த ஆர்யாவின் மாற்றம்!
Published by:Sheik Hanifah
First published:

Tags: Actor Ajith

அடுத்த செய்தி